பக்கம் எண் :


412 திருப்புகழ் விரிவுரை

 

கருத்துரை

சோலைமலை மேவு பெருமாளே! பொதுமாதர் மயல்தீர அருள் செய்யும்.

15

தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளாந்டை பட்டுத் தத்தடி யிட்டுத்                      தடுமாறித்
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப்                          பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளியவடித்துத்துய்த்துடல்செத்திட்                   டுயிர்போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்கைக் குப்பர முத்திக்                       கருள்தாராய்
கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசைலுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகந டத்தித் திட்டென எட்டிப்                        பொருசூரன்
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகடலுக்குட் புக்கிட எற்றிக்
களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப்                   பொருகோவே
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற்               றிரிவோனே
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்
குலகிரி யிற்புக் குற்றுறை யுக்ரப்                       பெருமாளே.

பதவுரை

கலணை விசித்து-சேணத்தைக்கட்டி, பக்கரை இட்டு-அங்கவடியிட்டு, புரவி செலுத்தி-குதிரைகளைச் செலுத்தியும், கைகொடு வெற்பை-தும்பிக்கையுடன் கொடிய மலைபோன்ற யானைகளை, கடுக நடத்தி-வேகமாக நடத்தியும், திட்டென எட்டி பொரு சூரன்-திடீர்