என்று நெருங்கிய வந்து போர் செய்த சூரபன்மனுடைய, கனபடை கெட்டு தட்டு அறவிட்டு-பெரியபடை அழிந்து நிலைகுலையும், திரை கடலுக்கு உள்புக்கிட ஏற்றி-சூரன் அலை கடலுக்குள் புகுமாறு அவனை மோதியும், களி மயிலை-மகிழ்ச்சி கொண்ட மயிலை, சித்ரத்தில் நடத்தி பொருகோவே-அழகாக நடத்திப் போர் புரிந்த தலைவரே! குலிசன் மகட்டு தப்பியும்-குல்சாயுதம் கொண்ட இந்திரன் புதல்வியாகிய தெய்வயானைக்குத் தெரியாமல், சென்று, குறவர் மகட்கு சித்தமும் வைத்து-வள்ளி நாயகி மீது உள்ளத்தை வைத்து, குளிர்தினை மெத்த தத்து புனத்தில் திரிவோனே-குளிர்ந்த தினைகள் மிகவும் பரவியுள்ள தினைப்புனத்தில் திரிந்தவேர! கொடிய பொருப்பை குத்தி முறித்து- பொல்லாத கிரவுஞ்சமலையை வேலால் குத்தி அழித்து, சமரம் விளைத்து-போர் புரிந்து, தற்பரம் உற்று-மேம்பட்ட உமது நீதியை விளக்கி, குலகிரியில் புக்கு உற்று உறை-சோலைமலையில் புகுந்து வீற்றிருக்கின்ற, உக்ர பெரமாளே-வீரம் பெருந்திய பெருமையிற் சிறந்தவரே! தலை மயி்ா-தலையிரானது, கொக்குக்கு ஒக்க நரைத்து-கொக்குபோலவே வெளுத்தும், கல கல என பல்கட்டது விட்டு- கல கல என்று பல்வரிசைகளின் கட்டு விட்டும், தளர் நடை பட்டு-நடை தளர்வுற்றும், தத்து அடி இட்டு-தத்தி தத்தி அடிவைத்து நடத்தும், தடுமாறி- தடுமாற்றத்தை யடைந்தும், தடிகொடு தத்தி-தடியை யூன்றி தாண்டியும், கக்கல் பெருதிட்டு-ஒக்காளம் மிகுந்து, அசனமும் விக்கி-உணவு உண்ண முடியாமல் விக்கல் எடுத்தும், சத்தியெடுத்து-வாந்தியாகியும், சளியும் மிகுந்து- சளியதிகப்பட்டு, பலகாலும் பித்தமும் எண்ணெயிலிட்டு, ஒக்க எரிக்க- எரித்தல்போல் உடம்பு எரிச்சல் உண்டாக, திரிபலை-தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றையும், சுக்கு திப்பிலி இட்டு-சுக்கையும் திப்பிலியையும் சேர்த்துக் கஷாயஞ் செய்து, தெளிய வடித்து உற்று- தெளியவைத்து வடிகட்டி, துய்த்து-அதனைப் பருகி, உடல் செத்து இட்டு உயிர் போம் முன்-உடல் மடிந்து உயிர் போவதற்கு பயிற்றி-அத்திருப்புகழின் சொற்களை நிரம்பப் பயின்றும், திருவடியை பற்றி-தேவரீருடைய திருவடியைப் பற்றியும், தொழுது உற்று-தொழுது உம்மையடைந்து, சென்னம் அறுக்கைக்கு- பிறப்பை ஒழிக்கும் வண்ணம், பரமுத்திக்கு அருள் தாராய்-பரமுத்தியை யடையத் திருவருள் புரிவீராக. பொழிப்புரை சேணம் கட்டி, அங்கவடியிட்டு குதிரைகளைச் செலுத்தியும், துதிக்கை கொண்ட மலை போன்ற கொடிய யானைகளை வேகமாக நடாத்தியும், திடீர் என்று நெருங்கி வந்து போர் புரிந்த சூரனுடைய |