பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 417

 

கருத்துரை

பழமுதிர் சோலைப் பரமனே! பரமுத்தி யருள்புரிவாய்.

16

மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து விழ
மணபரி மளங்கள் வேர்வை        யதனோடே
வழிபட இடங்க ணாட பிறைநுதால் புரண்டு மாழ்க
வனைகலை நெகிழ்ந்து போக       இளநீரின்
முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட
முகமுகமொ டொன்ற பாய       லதனூடே
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு
முடிவடிவொ டங்கை வேலு       மறவேனே
சிலைநுத விளம்பெண் மோகி சடையழகி யெந்தை பாதி
திகழ்மர கதம்பொன் மேனி       யுமைபாலா
சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக
திகழயி லெறிந்த ஞான        முருகோனே
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
குணவலர் கடம்ப மாலை       யணிமார்பா
கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு       பெருமாளே

பதவுரை

சிலை நுதல் இளம்பெண்-வில்லைப்போன்ற நெற்றியையுடைய இளம்பெண்; மோகி-சிவனிடம் மோகத்தை யுடையவள்; சடைஅழகி-அழகிய சடையையுடையவன்; எந்தை பாதி திகழ்-எமது பிதாவாகிய சிவபெருமானுடைய பாதியில் விளங்கும், மரகதம் பொன் மேனி-மரகதம் போன்ற பச்சைநிறத்து அழகிய உருவையுடையவளாகிய; உமை பாலா-உமா தேவியின் திருக்குமாரரே! சிறுநகைபுரிந்து-புன்னகை செய்து, சூரர்-சூராதியசுரர்களும், கிரி- கிரவுஞ்சமலையும், கடல்-சமுத்திரமும், எரிந்து போக-எரிந்துபோகும்படி, திகழ் அயில் எறிந்த-விளங்குகின்ற கூரிய வேலை விடுத்த ஞான முருகோனே- ஞானமேவடிவாய முருகக் கடவுளே! கொலைமிக பயின்ற வேடர்மகள்- கொலைத் தொழிலே பயின்ற வேடர் குலப்பாவையாகிய, வளி மணந்த தோள- வள்ளியம்மையை மணந்தருளிய தோள்களையுடையவரே! குண-நற்குணசீலரே! அலர் கடம்ப மாலை அணிமார்பா-அலர்ந்த கடப்ப மலர் மாலையை அணிந்த திருமார்பினரே! கொடிமினல் அடைந்த சோதி