பக்கம் எண் :


418 திருப்புகழ் விரிவுரை

 

-மின்னற்கொடி போன்ற சோதியே! மழகதிர் தவழ்ந்த ஞான-இளங்கதிர் விளங்கும் ஞானமூர்த்தியே! குலகிரி மகிழ்ந்து மேவு-சோலைமலையில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும், பெருமாளே பெருமையிற் சிறந்தவரே! மலர் அணைததும்ப - மலருடன் கூடிய படுக்கை அசைந்து கலையவும், மேக குழல் முடிசரிந்து வீழ-மேகம் போன்ற கரிய கூந்தலின் முடி சரிந்துவிழவும், மண பரிமளங்கள் வேர்வை அதனோடே வழிபட-நலமிக்க மணங்கள் வேர்வையுடனே ஒன்றுபடவும், இடம் கண் ஆட-விசாலமான கண்கள் அசையவும், பிறை நுதல் புரண்டு மாழ்க-பிறைபோன்ற நெற்றிபுரண்டு கலங்கவும், வனைகலை நெகிழ்ந்து போக-அலங்காரமாய் உடுத்த உடை நெகிழ்ந்து போகவும், இளநீரின் முலை இணைததும்ப-இளநீர் போன்ற இருதனங்கள் அசையவும், நூலின் வகிர் இடை சுழன்று வாட-நூலின் பிளவு போன்ற நுண்ணிய இடை சுழன்று வாட்டங் கொள்ளவும், முகம் முகமொடு ஒன்ற-முகம் முகத்தோடு பொருந்தவும், பாயல் அதன் ஊடே-படுக்கையிலே, முது மயல் கலந்து மூழ்கி அகிழினும்-பெரிய மோகச் செயலின் மயலில் கலந்து முழுகி அடியேன் களிகூர்ந்திருந்தாலும், அலங்கல் ஆடும்-மாலைகள் அசையும், முடிவடிவொடு-உமது சிரம் முதலிய திருவுருவத்தையும், அம் கை வேலும்-அழகிய திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதத்தையும், மறவேனே- மறக்கமாட்டேன்.

பொழிப்புரை

வில்லைப் போன்ற நெற்றியையுடைய இளம்பெண்; சிவ பெருமானிடம் மோகத்தையுடையவள், அழகிய சடையுடையவள்; எமது பிதாவாகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் திகழ்கின்ற மரகதம் போன்ற அழகிய மேனியையுடையவள் ஆகிய உமாதேவியின் திருக்குமாரரே! புன்னகை செய்து, சூரன் முதலிய வீரர்களும், கிரவுஞ்சமலையும், கடலும் எரிந்து போக விளங்குகின்ற வேலை விடுத்த ஞானமே வடிவாய முருகக் கடவுளே! கொலைத் தொழிலே பயின்ற வேடர் குலப்பாவையாகிய வள்ளியம்மையை மணந்த தோள்களையுடையவரே!மின்னல் கொடிபோன்ற ஜோதியே! இளங்கதிர் விளங்கும் ஞானமூர்த்தியே! சோலை மலையில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற பெருமிதம் உடையவரே! மலர் நிறைந்த படுக்கை அசைந்து கலையவும், மேகம் போன்ற கரிய கூந்தலின் முடி சரிந்து விழவும், நலமிக்க மணங்கள் வேர்வையுடன் வழியவும், விசாலமான கண்கள் அசையவும், பிறை போன்ற நெற்றி புரண்டு கலங்கவும், அலங்காரமாக உடுத்த உடை நெகிழ்ந்து போகவும், இளநீர் போன்ற இருதனங்கள் அசையவும், நூலின் பிளவு போன்ற நுண்ணிய இடை