சுழன்று வாட்டங் கொள்ளவும், முகம் முகத்தோடு பொருந்தவும், படுக்கையிலே பெரிய மோக மயலின் செயலில் கலந்து முழுகி மகிழ்ச்சி மிகுந்த போதும் மாலைகள் அசையும் உமது சிரம் முதலிய திருவுருவத்தையும், அழகிய திருக்கரத்திலேயுள்ள வேலாயுதத்தையும் மறக்க மாட்டேன். விரிவுரை இத்திருப்புகழின் முதல்மூன்று அடிகளில் மாதரை மருவும் போது ஏற்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகின்றார். முதுமயல் கலந்து மூழ்கி மகழினும் அலங்கலாடு முடிவடிவொடங்கை வேலு மறவேனே :- “முருகா! மாதர்மயக்கத்தால் மிகுந்த மகிழ்ச்சிக் கடலில்முழுகினாலும் உனது வடிவையும் வேலையும் மறவேன்” என்று சுவாமிகள் கூறுகின்றார். “கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் கலவிக்கள்ளை மொண்டுண்டயர்கினும் வேல்மறவேன்” - கந்தரலங்காரம் (37) சிலைநுதல் இளம்பெண்:- அம்பிகையின் நெற்றி வில்லைப்போல் வளைந்து விளங்குகின்றது. “சிலைநு தலிமயவல்லி திருக்கண்ணோக் குற்றதன்றே” - பெரியபுராணம் கொலைமிக பயின்ற வேடர் மகள்:- “கொலையே புரிவேடர் குலப்பிடிதோய் மலையே” - அநுபூதி (92) கருத்துரை சோலைமலைச் சோதியே! எக்காலத்தும் உன் வடிவையும் வடிவேலையும் மறவேன். ஆறு திருப்பதி அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள் அபகட மகபாவிகள் விரகாலே அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள் அசடரொ டுறவாடிகள் அநியாயக் கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் அடிகேடிகள் கருதிடு கொடியாருட னினிதாகக் |