கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை கழலிணை பெறவேயினி யருள்வாயே அலைபுனல் தலைசூடீய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற அதிரிடும் வடிவேல்விடு மதிசூரா தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென தரணியி லடியார்கண நினைவாகா சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய தடமயில் தனிலேறிய பெருமாளே பதவுரை அலைபுனல் தலை சூடிய-அலை வீசும் கங்காநதியைத் தலையில் சூடிய, பசுபதி மகன் ஆகிய-பசுக்களக்குப் பதியாகிய சிவபெருமானுடைய குமாரராகிய, அறுமுகவடிவே-ஆறுமுக வடிவுடையவரே! அருள்குரு நாதா-ஆன்மாக்களுக்கு அருள் புரியும் குருநாதரே! அசுரர்கள் குடியே கெட-அசுரர்களின் குடி அழியும்படியும், அமரர்கள், பதியே பெற-தேவர்கள் தமது அமராவதி நகரைப் பெறுமாறும், அதிர் இடும் வடிவேல் விடும்-ஒலியுடன் செல்லும் கூரிய வேலாயுதத்தை விடுத்தருளிய, அதிசூரா-அதிசூரரே! அயன்-பிரமதேவன், தலைஅறியா சிரத்தை அறியமாட்டத, ஒரு சிவகுருபரனே-ஒப்பற்ற சிவபெருமானுக்குக் குருமூர்த்தியே என்ற, தரணியில் அடியார் கணம்-பூமியில் உள்ள அடியார்களின் திருக்கூட்டம், நினைவாக-நினைக்கின்ற அழகரே! சகலமும் முதல் ஆகிய-சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும், அறுபதி நிலை மேவிய-ஆறு திருப்பதிகளில் வீற்றிருக்கின்ற, தடமயில் தனில் ஏறிய- பெரிய மயிலின் மீது ஏறிய, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! அலைகடல் நிகர் ஆகிய-அலை வீசும் கடலுக்கு ஒப்பாகிய, விழி கொடு வலை வீசிகள்- கண்களைக் கொண்டு காம வலை வீசுபவர்கள்; அபகட மகபாவிகள்-வஞ்சனை எண்ணமுடைய பெரிய பாவிகள், விரகாலே-உபாயத்தாலே, அதிவித மதர் ஆய், பலவிதமான செருக்குடன், அத அநித மொழி பல கூறிகள்-தாழ்வான அநீதமான வார்த்தைகள் பல பேசுபவர்கள், அநியாய அசடரொடு உறவு ஆடிகள்-கீழ்மக்களுடன் உறவு செய்பவர்கள், அநியாய கலைபகர் விலை மாதர்கள்-அநியாய வழியிலே உடலை விலை கூறி விற்கும் விலைமகளிர்கள், கருதிடு கொடியார் உடன்-வஞ்சனையையே நினைக்கின்ற கொடி போன்றவர்களாகிய பொது மாதருடன், இனிது ஆக - இன்பமாகக்கூடி, கனதன முலைமேல் விழு கபடனை-பாரமான கொங்கை மேல் விழுகின்ற வஞ்சகன், நிருமுடனை-முழுமூடன், கழல் |