பக்கம் எண் :


424 திருப்புகழ் விரிவுரை

 

ஆறுதிருப்பதி

ஆறு திருப்பதிகளாவன;

(1) திருப்பரங்குன்றம்

(2) திருச்சீலலைவாய் (திருச்செந்தூர்)

(3) திருவாவினன்குடி (பழநி)

(4) திருவேரகம் (சுவாமிமலை)

(5) குன்றுதோறாடல் (பல மலைகளும்)

(6) பழமுதிர்சோலை

இந்த படைவீட்டுத்தலங்கள் ஆறும் நமக்குள் ஆதாரங்கள் ஆறனையுங் குறிக்கின்றன.

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, என்ற ஆறு ஆதாரங்களிலும் எழுந்தருளியிருப்பவர் ஆறுமுகப் பெருமான்.

“ஆறுதிருப்பதிகண் டாறெழுத்தை யன்பினுடன்
   கூறுமவர் சிந்தைகுடி கொண்டோனே”     - கலிவெண்பா.

கருத்துரை

தானத்திற்குந் தவத்திற்குந் தலைவரே! சாரதி துணைவ! முருகா! தேவாரப் பாடல் பாடியருளியவரே! ஆறு திருத்தல முடையவரே! பிறவியை யொழித்து உமது அடிமையாக ஞானத்தைத் தந்து அருள்புரிவீர்.

ஆறாவது படைவீட்டுத்

திருப்புகழ்விரிவுரை முற்றிற்று.