இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி லிளமைகொடுங் காத லாற்றில் நிலையாத அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை அடையுமிடஞ் சீலை தீற்று கருவாயில் அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த அளறிலழுந் தாம லாட்கொ டருள்வாயே விதுருனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி வருமாள விரகினெழுந் தோய நூற்று விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற விஜயனெடும் பாசு தீர்த்தன் மருகோனே மதியணையுங்சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின் வழியருளின் பேறு காட்டி யவிராலி மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில் வழியருளின் பேறு காட்டு பெருமாளே. பதவுரை விதுரன் நெடுந்த்ரோணம் ஏற்று-விதுரர் தமது பெரிய வில்லையெடுத்து, எதிர் பொரும் அம்பு ஆதி ஏற்றி-எதிரியுடன் போர் செய்ய அன்பு முதலிய கணைகளைத் தொடுத்து, விரகின் எழுந்து ஓய-சமர்த்துடன் எழுந்துபோர் புரியுஞ் செயல் ஓயுமாறும், நூற்றுவரும் மாள-துரியோதனன் முதலிய நூறுபேர்களும் இறந்து போம்படியும், பிரவு ஜெயன்-உபாயஞ்செய்த ஜெயவீரனும், காளி காட்டில் வருதருமன்தூதன் காளிக்கு உரிய வனத்தில் வாழ்ந்து வந்த தருமராஜனுடைய தூதனும், நீற்ற விஜம் நெடும் பாகன்- திருநீற்றையணிந்த அர்ச்சுனனுடைய பெரிய தேர்ப்பாகனும், ஆகிய தீர்த்தனன் மருகோனே-பரிசுத்த மூர்த்தியாகிய கண்ணபிரானுடைய திருமருகரே! மதி அணையும்-சந்திரன் அணையும்படி உயர்ந்துள்ள, சோலை ஆர்த்தும்- சோலைகளோடு |