பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 47

 

கூடியும், அதிவள-அதிக வளப்பமுள்ள, சந்தான கோட்டின்-சந்தானம் என்னுந் தேவதருவைப்போல், வழி அருளின் பேறு காட்டிய தன்னை வழிபட்டோர்க்கு விரும்பிய பேறுகளை உதிவுகின்ற, விராலிமலை மருவும் பாதி ஏற்றி-விராலி மலையில் பாதி மலையில் வரச்செய்து, கடிகமழ் சந்தான கோட்டில்-அங்குள்ள சந்தான கோட்டம் என்ற வாசனை வீசும் இடத்தில் எழுந்தருளியிருந்து, வழி அருளின் பேறுகாட்டு-தம்மை யடைந்த அன்பர்கட்கு விரும்பிய நலன்களை வழங்கிக் காட்டுகின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! எதிர் எதிர்கொண்டு,தங்கள் எதிர் எதிரில் வருகின்றவர்களைக் கண்டவுடன், ஓடி ஆட்கள்-ஓடிச்சென்று ஆட்களை, களவு அது அறிந்து, திருட்டுத்தனமாக அவர்களின் நிலையை அறிந்து, ஆசை பூட்டி, அவர்கட்கு ஆசை பிறக்குமாறு செய்து, இடறி விழும் பாழி காட்டும்-அந்த ஆடவர்கள் தடுக்கி விழாதபடி தமது மறைவிடத்தைக் காட்டுகின்ற, மடமாதர் மடமாதர்களுடைய, இறைவை கொளும் கூவல்-இறை கூடையைக் கொள்கின்ற கிணறு போன்றது, மூத்த கறை ஒழுங்கும் தாரை-பழைய அழுக்குகள் ஒழுகும் வழி, பார்க்கில்-ஆராய்ந்து பார்க்கில், இளமை கொடும் காதல் ஆற்றில்-இளமைப் பருவத்துக் கொடிய காதல் ஆற்றில், நிலையாத-நிலைக்க முடியாத, அதி விகடம்பீழல்-மிகுந்த துன்பத்தைத் தரும் இடம், அற்றஅழுகி விழும் பீறல்-மிகவும் அழுகி விழுகின்ற கிழிந்த இடம், ஊத்தை அடையும் இடம்-அழுக்கு சேரும் இடம், சிலை தீற்று கருவாயில்-ஆடை மூடுகின்ற கருவுண்டாகின்ற துவாரவாசல், அருவி சலம் பாயும் ஓட்டை-அருவிபோல் நீர் பாய்கின்ற ஓட்டை, அடைவு கெடும் தூரை- தகுதியற்ற அடிப்பாகம் ஆகிய, பாழ்த்த அளறில்-பாழுஞ் சேற்றில் அழுந்தாமல்-அடியேன் அழுந்திவிடாமல், ஆட்கொண்டு அருள்வாயே-தேவரீர் ஆட்கொண்டருள வேண்டும்.

பொழிப்புரை

பெரிய வில்லை வளைத்து அதில் அம்புகளைத் தொடுத்து சாமர்த்தியத்துடன் போர் புரியாமல் விதுரர் ஓயும்படியும், துரியோதனனாதியர் நூற்றுவரும் இறக்கும்படியும், உபாயஞ்செய்த ஜெயவீரனும், காளிக்கு உரிய கானகத்தில் வாழ்ந்து வந்த தருமபுத்திரனுடைய தூதுவரும், திருநீறு பூசுகின்ற அர்ச்சுனனுடைய தேர்ப்பாகருமாகிய புனித மூர்த்தியாகிய கண்ணபிரானுடைய திருமருகரே! சந்திரன் அணையுமாறு உயர்ந்த சோலைகள் சூழ்ந்து, அதிகவளமுள்ள சந்தானம் என்ற தேவதருவைப் போல் தன்னை வழிப்பட்டோர்க்கு விரும்பியவற்றைத் தரவல்ல விராலிமலையில், பாதி மலையளவில் அடியவர் ஏறவைத்து, அங்கு நறுமணம் வீசும் சந்தான கோட்டம் என்ற இடத்தில் எழுந்தருளியிருந்து, அன்பர்கட்கு வேண்டிய