சந்தான கோட்டின் வழியருளின் பேறு காட்டி:- சந்தானம் என்ற தரு தெய்வதரு. இது தன்னையடைந்தார்க்கு எல்லாந் தர வல்லது. இதுபோல் விராலிமலையும் தன்னையடைந்து வழிபடும் அடியார்க்கு வேண்டிய வேண்டியாங்கு வழங்க வல்லது. பாதியேற்றி கடிகமழ் சந்தான கோட்டில் வழியருளின் பேறு காட்டு:- விராலிமலைக்கு வரும் அடியவர்களை பாதி மலைவரை ஏறச்செய்து, அங்கு நறுமணங் கமழ விளங்கும் சந்தான கோட்டம் என்ற இடத்தில் எம்பிரான் எழுந்தருளியிருக்கின்றார். வழிபட்டோர்க்கு எல்லா நலன்களும் அருளுகின்றார். கருத்துரை விராலிமலை முருகா! மாதர் மயக்கத்தில் அழுந்தா வண்ணம் ஆண்டருள்வீர். ஐந்து பூதமு மாறு சமயமு மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்ப தோர்வித்த மான லிபிகளும் வெகுரூப அண்ட ராதிச ராச ரமுமுயர் புண்ட ரீகனு மேக நிறவனும் அந்தி போலுரு வானுநிலவொடு வெயில்காலும் சந்தர சூரியர் தாமு மசபையும் விந்து நாதமு மேக வடிவம தன்சொ ரூபம தாக வுறைவது சிவயோகம் தங்க ளாணவ மாயை கருமம லங்கள் போயுப தேச குருபர சம்ப்ரதாயமொ டேயுநெறியது பெறுவேனோ வந்த தானவர் சேனை கெடிபுக இந்த்ர லோகம்விபூதர் குடிபுக மண்டு பூதப சாசு பசிகெட மயிடாரி வன்கண் வீரிபி டாரி ஹரஹர சங்க ராஎன மேரு கிரிதலை மண்டு தூளெழ வேலை யுருவிய வயலூரா |