பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 5

 

பேர் பெற்றனன். (தாரகம்-கடத்தல்). தாரகன் தன் மக்கள் மூவரையும் நோக்கி, “மைந்தர்காள்! தவத்தினும் சிறந்தது வேறு இல்லை. தவத்தாலேயே எல்லாச் சிறப்புக்களையும் நான் பெற்றேன். நீங்களும் சிவபெருமானை வேண்டிப் பெருந்தவம் புரிந்து அழியாத வரத்தைப் பெற்று உய்மின்” என்று ஏவினான். இதனையறிந்த இந்திரன், பிரமன், திருமால் முதலிய இமையவர் முதலிய யாவரும் சிந்தாகுலமுற்று வைகுண்டத்தில் கூடி, “‘அந்தோ! இனி நமக்கு உய்வில்லை. தாரகனுக்கு நாம் ஏவல் செய்வோராய் ஒழியாது துன்புற்று உழ்கின்றோம். இனி அவனுடைய புதல்வரும் தவங்கிடந்து வரம்பெறுவரேல் நமது கதி யாதாகும்? என்செய்வோம்” என்று ஏங்கினார்கள். ஏங்கிய அவர்கள் தாரகனைக் கொல்லும்பொருட்டு ஓர் அபிசார கேள்வியைப் புரிவாராயினர். அதனையறிந்த தாரகன் கொதித்த உள்ளமுடையவனாய் “அமரரை அடியுடன் அழிப்பேன்” என்று வைகுண்டம் போனான். அவன் வரவை யறிந்த மாலயனாதி வானவர் “இறந்தோம்” என்று கதறி ஓடி பொன்மேருகிரியிற் சென்று அதில் அனைவரும் ஒளிந்து கொண்டார்கள்.

தாரகன் சீற்றமுற்று ஆலகாலம்போற் சென்று மேரு மலையிடம் அடைந்து “தேவர்களே! நுமது பேடித்தன்மை நன்று நன்று; சற்றும் வீரமில்லாத வெற்றுத் தகர்களே! என்று பரிகசித்து, “உங்கட்கு இடந் தந்த மேரு மலையை வேருடன் பறிப்பேன் என்றுகூறி அம்மாமேரு மலையை வேருடன் குடைந்து தூக்கினான். குடைபோலக் குலுக்கினான். சுழற்றினான், ஆலமரத்தை ஒருவன் அசைத்தால் அதிலுள்ள நன்கு கனிந்த கனிகள் உதிர்வதுபோல் தேவர்களும் முனிவர்களும் கீழே விழுந்து கயிலையை நோக்கி ஓடினர். தாரகன் அது கண்டு, எள்ளி நகையாடி மலையை முன்போல் நிறுவித் தனது ஊர் புகுந்தான்.

அயனாரிடமும் அரனாரிடமும் அளபற்ற வரம்பெற்ற தாரகன் இவ்வண்ணம் உலகங்களையெல்லாம் தன்னகப்படுத்தி ஆட்சி புர்ந்தனன். பிரம விட்டுணு முதலிய தேவர்களும் ஏனைக் கணங்களும் கவலைக் கடலுள் மூழ்கி காடு மலை குகை முதலிய இடங்களில் உருமாறி ஒளிந்திருந்தனர். இந்திரன் சந்று தைரியத்துடன் வந்து தாரகனை எதிர்த்து அமராடி வச்சிராயுதத்தை எறிந்தனன். அது தாரகன்மீது பட்டு துரும்புபோல் ஒடிந்து துகளாயிற்று. அதுகண்டு வெருவிய அமரர்கோமான் தனது மனைவி சசிதேவியுடனும் மகன் சயந்தனுடனும் இருடி