ஆறுசமயமும்:- சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சாக்தம, சௌரம் என்பன. இறைவனுடைய அருட்குணங்கள் ஆறினையும் தனித்தனியே தமக்குரியவாகக் கொள்வன. மந்த்ர:- மந்-நினைப்பு;திர-விடுப்பது; நினைப்பவரைப் பாவத்தினின்றும் விடுப்பது, அது ஏழு கோடிகளையுடையது. நம;, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வௌஷட், பட், ஹும்பட், என்பன. வேத:- இருக்கு, யஜுர், ஸாமம், அதர்வணம், என்பன. ஆயுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்தவேதம், தநுர்வேதம், என்பன உபவேதங்களாம். புராண:- புராணங்கள் பதினெட்டு. சைவம், பௌஷ்யம், மார்க்கண்டேயம், இலிங்கம், காந்தம், வராகம், வாமன்ம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காருடம், நாரதீயம், வைணவம், பாகவதம், பிரமம், பதுமம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம் என்பன. ஐம்பதோர் விதமான லிபிகளும்:- ஆறாதாரங்களில் அடங்கியுள்ள அகராதி க்ஷகாராந்த மாகவுள்ள மாத்ருகா அட்சரங்கள். அசபை:- உதடு அசையச் செய்வது ஜபம். உதடு அசையாமல் மானஸீகமாகச் செய்வது அஜபாநலம். அதனை ஹம்ஸமந்திரம் என்பர். ஏகவடிவம்:- சுட்டியறிகின்ற அறிவு நீங்கி எல்லாம் சிவவடிவாகப் பார்த்தல். சிவயோகம்:- யோகம் என்னும் சொல்லுக்குப் பொருந்துதல் என்று பொருள். பொருந்துதல் என்ற உடனே (1) பொருந்துகின்ற பொருள் எது? (2) எந்தப்பொருளோடு பொருந்த வேண்டும்? (3) பின் பொருந்தற்குரிய காரணம் யாது? (4) முன் பொருந்தாதிருந்த மைக்குக் காரணம் யாது? (5) ஒன்றை மற்றொன்றைனொடு பொருத்துகின்ற உபகார சக்தி எது? (6) பொருந்திய பின்விளையும் பயன் யாது? என்ற வினாக்கள் எழும். இவ்வினாகட்கு முறையே விடை பின்வருமாறு: |