பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 53

 

1.பொருந்துகின்ற பொருள் ஜீவான்மா;

2.பொருந்தப்படும்பொருள் பரமான்மா;

3..பின்.பொருந்துதற்குரிய காரணம் பிரமானந்த வேட்கை;

4.முன் .பொருந்தா திருந்தாமைக்குக் காரணம் ஆணவமல மறைப்பு;

5.பொருந்துகின்ற பொருள் இறைவனோடு தாதான்மியப்பட்டு நிற்கும் அனுக்கிரக சக்தி;

6.பொருந்தியபின் விளைவது சிவானந்தம்.

ஒருத்தியும் ஒருவனும் கூடி யின்புறுவார்களானால், கூடுகின்ற மங்கையும், கூட்டப்படுகின்ற மணாளனும், அவள் அவனைக் கூடுவதற்குரிய காமவேட்கையும், முன் அவனைக் கூடாதிருந்தமைக்குக் காரணம் அவனை அறியாமையும், அவனை அவளுடன் கூட்டிவைத்து உதவி புரிகின்ற தோழியும், கூடியபின் விளைகின்ற இன்பமும் போலென்றுணர்க.

இனி, ஓர் அறிவற்ற பொருள் மற்றோர் அறிவற்ற பொருளுடன் கூடி இன்புறுவதில்லை. ஒரு மரப்பலகை ஒரு மாம்பழத்துடன் கலந்து அதன் மதுரத்தை யறியாது. அறிவற்ற பொருளாயினும் அறிவுடைய பொருளுடன் கூடுங்கால் அறிவுடைய பொருள் இன்புறும். ஒரு மாங்கனியை ஒரு மனிதம் நுகர்ந்து இன்புறுவன். ஆயினும் அல்ப இன்பமேயாம்; அதனினும் சிறந்தது அறிவுடைய பொருள் மற்றோர் அறிவுடைய ஒருத்தியுங் கூடுகின்ற பொழுது, மிகுந்த இன்பம் உண்டாகும். ஆயினும் அவ்வின்பம், கணப்பொழுதில் மறைவதும், தூய்மையில்லாததும், நோய் செய்வதும், வெறுக்கத்தக்கதுமாம்.

சிற்றறிவுடைய சீவான்மா பேரறிவுடைய பரமான்மாவோடு கூடுகின்ற பொழுது, தெவிட்டாத பேரின்பமும், அநுபவிக்க அநுபவிக்கக் குறையாத ஆனந்தமும், நிலைபேறான உண்மை யின்பமும் உண்டாகும். ஆதலால், இது சிவனுடன் பொருந்துதல் எனப் பொருள்படும்.

அடடாங் யோகமு மாதாரமாறு மவத்தையைந்தும்
விட்டேறிப்போன வெளிதனிலே வியப் பொன்றுகண்டேன்
வட்டாகிச் செம்மதிப்பா லூறலுண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பமென்னைவிழுங்கி இருக்கின்றதே. -பட்டினத்தார்.

நிற்க, புராணவாயுவை முறைப்படி ஒடுக்கி உள்ளத்தை ஒடுக்குவது ஒருமுறை; அதற்கு ஹடயோகம் என்றுபேர். அது குருவின்பால்