பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 55

 

இந்திய விடயம்தன்னொடு சிவணல் யோகமென்பார்ச்சிலர்
                                                            சிலர்தஞ்
சிந்தனை யுயிரோ டடைத னல்யோகமென்பரி தன்றியுஞ்
                                                            சிலர்தாம்
முந்திய பிராண னபானனோடடைத லென்பரிம் மொழிந்தவை
                                                            யனைந்து
மந்தமில் யோகமல்ல நற்சீவன் பரத்துடன் னடைவதே யோகம்.

வெந்த நீறணியிருடியர்:-

விராலிமலையில்குகைகளில் முனிவர்கள் சமாதி நிலையில் உறைகின்றனர். அவர்கள் திருநீறு தரித்து விளங்குகின்றனர். அத்திருநீற்றின் அளவிடற்கரிய பெருமையைச் சிறிது கூறுதும்.

திருநீறு செய்யும் விதி

முத்தி தருவது நீறு முநிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் றிருநீறே.

திருநீறு, பசிதம், இரட்சை, விபூதியெனப் பல நாமங்கள் பெற்று விளங்கும். அறியாமையை யகற்றி சிவசோதியைத் தரலால் பசிதம்; பேய் பழிபாவம் நோய் ஆகிய தீகைளின்றுங் காப்பதனால் இரட்சை; அளவற்ற செல்வத்த் தருதலால் விபூதி; எனப் பெயர் பெறும்.

இரும்புக்கவசம் பூண்டவனுக்கு ஆயுதங்களின் துன்பம் நேராது. அதுபோல், திருநீறு என்ற வஜ்ரகவசம் பூண்டார்க்கு யாதோர் இடரும் எய்தாது. வினைநீங்கி வீடுபெறுவர்.

கங்காளன் பூசங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசிமகிழ்வரே யாமாகிற்
றங்கா வினைகளும் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே.          - திருமூலர்.

திருநீறு கற்பம்,அநுகற்பம், உபகற்பம், என மூன்று வகைப்படும்.

கற்பம்:-

கன்றுபோடாதது, மலடு, இளங்கன்றுடையது, கருவுற்றது, முதிர்ந்த கன்றுடையது, அங்கப்பழுதுடையது. ஆகிய பசுக்களை நீக்கி, நல்ல அழகுடைய சிறந்த கன்றோடு கூடிய பசுவை பங்குனி மாதத்தில் நெல்லறுத்த வயலில் மேயவிட்டு, அப்பசு விடுகின்ற கோமய (சாண) த்தை அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்