பக்கம் எண் :


56 திருப்புகழ் விரிவுரை

 

ணமி ஆகிய நாள்களில்,காலை நீராடி சிவபூஜை முதலியன செய்து, சாணம் கீழே விழாமற்படிக்கு, தாமரை, பலாசம், வாழை ஆகிய இலைகளில் ஏதாவதொன்றில், சத்யோஜாத மந்திரஞ் சொல்லி ஏற்கவேண்டும். மேல் வழும்பினை எடுத்துவிட்டு, வாமதேவ மந்திரஞ் சொல்லி, பஞ்ச கவ்வியம் விட்டு, அகோர மந்திரம், கொல்லிப் பிசைந்து, தற்புருட மந்திரஞ் சொல்லி உருண்டை செய்தல் வேண்டும். ஓமத்தீ மூட்டிபதடியுடன் சேர்த்துச் சுட்டு, நல்லபதத்தில் ஈசான மந்திரஞ் சொல்லி எடுத்து, புதிய ஆடையில் வடிகட்டி, பொன், வெள்ளி, தாமிரம், ஆகிய பாத்திரம் உத்தமம், மத்திமம், அதமம், இன்றேல் புதியமண் பித்தளை, சுரை ஆகிய பாத்திரங்களிலும் வைக்கலாம். அவ்வாறு்வைக்கும் போது அத்திருநீற்றை சிவபெருமானுடைய திருவுருமாக எண்ணி பஞ்சப் பிரமமந்திரமும், சடங்க மந்திரமும் சொல்லி, அவற்றுடன் சண்பகம், தாழை, பலாசம்புன்னாகம், தாமரை, துளசி, பாதிரி, தக்கோலம், நாயுருவி, தருப்பையின் நுனி முதலியவற்றை விபூதியிலிட்டு, மலர் சூட்டி வெண் துகிலால் வாய்கட்டு, காயத்திரி மந்திரஞ் சொல்லி தேனுமுத்திரைகாட்டி பத்திரப்டுத்துதல் வேண்டும். அதில் வேண்டியபோது சிவமந்திரஞ் சொல்லி எடுத்து உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

அநுகற்பம்:-

சித்திரை மாதத்தில்காட்டிற்குச் சென்று அங்குள்ள பசுவின் உலர்ந்த கோமய (சாணத்)தைக் கொண்டுவந்து இடித்து பஞ்சகவ்வியம் விட்டு முன் கூறிய முறைப்படி நீற்றிஎடுக்கவேண்டும்.

உபகற்பம்:-

காட்டுத்தீயால்வெந் நீற்றைக் கொணர்ந்து இடித்து கோநீர்விட்டுப் பிசைந்து முன் கூறிய முறைப்படி நீற்றி எடுத்து வைக்கவேண்டும். இனி கற்பம் என்றும் ஒருவகை உண்டு. அது உபகற்பத்தின் சிறு பிரிவாம்.

சர்வ சங்கார காலத்தில் சிவபெருமான் மூவரையும், தேவரையும், நெற்றிக் கண்ணால் எரித்து அம்மயானத்தில் நடித்தனர். அப்பொழுது அவருடைய அருள் திருமேனியில் அந்நீறு முழுவதும் படிந்தது. அதனைச் சிவபெருமான் திருக்கரத்தால் வழித்து எறிந்தனர். அதனை இடபதேவ் உண்டு தன் வீரியத்தைப் பசுக்கள் பால் விடுத்தனர். அதனாலும் தேவர்கள் யாவரும்