பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 57

 

பசுவின் உடம்பில்வசிப்பதாலும், பசுவின் சாணத்தை எரித்த நீறு மிகவும் புனிதம் பெற்றது.

அத்திருநீற்றை ஒரு கரத்தில் வாங்குதலும், தலை கவிழ்ந்து பூசுதலும் குற்றம். இனிதிரிபுண்டரமாக அணிகின்ற விதியை தத்தம் குருமூர்த்தியிடம் கேட்டுத்தெளிக. சென்னியில் அணிவதால் கழுத்துவரை செய்த பாவங்கள் தீரும். மார்பில் அணிவதால் உள்ளத்தால் செய்த பாவம் தீரும். கரத்தில்அணிவதால் கரத்தால் செய்யும் பாவங்கள் தீரும். முழங்தாளில் அணிவதால் கால்களால் செய்யும் பாவங்கள் தீரும். இங்ஙனம் திருநீறு எல்லாப் பாவங்களையும் போக்கவல்லது. மிகுந்த பாவம் செய்தவர்க்கு திருநீற்றில் வெறுப்பு உண்டாகும். திருநீறு இடாத வரைக் கண்டு பெரியவர்கள் அஞ்சுகின்றனர்.

பிணியெலாம்வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்புமஞ்சேன்
துணிநிலா அணியினான்றன் தொழும்பரா டேழுந்தி அம்மால்
திணிநிலம்பிளந்து காணாச் சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால் அம்ம நாமஞ்சுமாறே.
                                                   - மாணிக்கவாசகர்.

போற்றி நீறிடாப்புலையரைக் கண்டால் போக போகநீர்                                                         புலமிழ்ந்தவமே
நீற்றின் மேனியாத்ங்களவளக்கண்டால்நிற்கவந் நிமலரைக்                                                                காண்க
நீற்றின் னன்னெறி யீதுகாண்கண்காள் தமகாள் தமனியப்                                                                பெருந்தநு
                                                    வெடுத் தெயிலைக்
காற்றி நின்றனங்கண்ணுதற் கரும்பைக் கயிலையாளனைக்                                                   காணுதற் பொருட்டே.
                                            - இராமலிங்க அடிகள்.

“பகர் புனித நீறணியார் ஞானமடையார் கோடி பாவமானாலுந்
   தகாத்லுறார்சமுசார மாபாவமுடையராய்த் தாழ்வார் கும்பி
   புகரில்வரு ணாச்சிரம பலமுமுறா ரவரியற்றும் புனித மான
   நிகரரிய புண்ணியமும்பாதகமா மென்றுமறை நிகழ்த்து மாலோ”

திருநீறணியாது செய்யும் தான தருமங்களாலும், விரதங்களாலும், தவங்களாலும், ஒருபோதும் பலன் அடையார். ஆதலால் திருநீற்றை ஒவ்வொருவரும் அன்புடன் அணிதல் வேண்டும்.

சிவநாமத்தைக்கூறி திருநீறிட்டார், நிச்சயமாக சிவகதி பெறுவர். “திருவாய்ப் பொலிய சிவாயம வென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி” என்று அப்பமூர்த்திகள் கூறுகின்ற அருமையை யுன்னுமின். “சுத்ரமாவது நீறு” “கவினைத் தருவது நீறு” என்ற திருவாக்குகளையும் உய்த்துணர்மின்; மேல் நாட்டாரும் இன்று அழகு செய்ய வெண் பொடியை முகத்திற் பூசி யுவக்கின்றன