ரன்றோ? சிவ்பொடி பூசிற் பவப்பொடியாகும். சிவநாமயத்தை கூறி திருநீறிட்டார்க்கு பேய் பில்லி பூதங்களாலும், நோய்களாலும், துன்பம் நேராது என்பதை இன்றைக்கும் கண்கூடாகக் காண்கின்றோம். “நீறில்லா நெற்றி பாழ்” என்ற தமிழ்ன்னையின் அமிழ்த வுரையையும் நினைமின், அன்பர்கள் அனைவரும் அன்புடன் அரனாமங் கூறி திருநீறிட்டு வினைகளை வேரோடு களைந்து இருமை நலன்களை எளிதிற் பெறுவார்களாக. விளக்கம் திருப்புகழ் விரிவுரை 3ஆம் தொகுதி 260 ஆம் பக்கத்திலும் 5ஆம் தொகுதி 349ஆம் பக்கத்திலும் கண்டு கொள்ளவும். விண்டுமேல்மயிலாட..............பொன் விஞ்சவீசு:- அருணகிரியார்இயற்கைக் காட்சியில் நம்மை ஈடுபடுக்கின்றனர். விராலிமலையில் எந்நேரமும் ஒரு நடனக் கச்சேரி நடக்கின்றது. நடனமாடுகின்ற நட்டுவனார் வண்டு; அந்த நடனத்தைக் கண்டு கொன்றைமரம் என்ற தனவந்தன் தனது மலர்களாகிய பொற்கட்டிகளை அலட்சியமாக அப்படி வீசுகின்றது. என்ன அழகு? இவ்வண்ணமே எமது ஞானசம்பந்தப் பெருந்தகையாருங் கூறுமாறு காண்க. வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட விரைசேர்பொன்னிதமிதர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே. கருத்துரை அசுரரை யழிக்க வேல் விடுத்தருளிய வயலூராண்டவரே! விராலிமலையுறை வித்தகரே! எல்லாம் சிவவடிவாகப் பார்த்து சிவயோகத்தில் நிலைபெற சற்குரு பரம்பரையோடு சேர அருள் புரிவீர். கரதல முங்குறி கொண்ட கண்டமும் விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர் கனவிய கொண்டைகுலைந்தலைந்திட அதிபாரக் களபசு கந்தமி குந்த கொங்கைக ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய் கனியித ழுண்டுது வண்டு பஞ்சனை மிசைவீழா இரதம ருந்தியு றுங்க ருங்கயல் பொருதுசி வந்துகு விந்திடும்படி |