பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 59

 

யிதவிய வுந்தியெ னுந்தடந்தபனி                   லுறமூழ்கி
இனியதொரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய
இளமை கிழம்படு முன்ப தம்பெற வுணர்வேனோ
பரத சிலம்புபு லம்பு மம்பத
வரிமுக எண்கினு டன்கு ரங்கணி
பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி           யிடையேபோய்ப்
பகடியி லங்கைக லங்க அம்பொனின்
மகுடசி ரந்தச முந்து ணிந்தெழ
படியுந டுங்கவி ழும்ப னம்பழ                           மெனவாகும்
மருதமு தைந்தமு குந்த னன்புறு
மருககு விந்தும லர்ந்த பங்கய
வயிலயில் வம்பவிழ் சண்ப கம்பெரி                 யவிராலி
மலையில் விளங்கிய கந்த என்றுனை
மகிழ்வொடு வந்திசெய் என்றுனை
வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள்      பெருமாளே.

பதவுரை

பரத சிலம்பு-பரத நாடகத்திற்குரிய சிலம்பு காலணி, புலம்பும் அம் பத- ஒலிசெய்கின்ற அழகிய திருவடியை யுடையவரே! வரி முக எண்கின் உடன்- வரிகளோடு கூடிய முகமுடைய கரடிப்படையுடன், குரங்கு அணி-குரங்குப் படைகண், பணிவிடை சென்று முயன்ற-குற்றேவல் செய்தற்குப்போய் முயற்சி செய்த, குன்று அணி இடையேபோய்-அழகிய மலைவழியே சென்று, கபடி இலங்கை கலங்க - ஆடலோடு கூடிய இலங்காபுரி கலங்க, அம்பொ(ன்) னின் மகுடசிரம் தசமும்-அழகிய பொன்னாற் செய்யப்பட்ட மணிமுடிகளைத் தரித்த, (இராவணனுடைய) பத்துத்தலைகளும், துணிந்து-அறுபட்டு எழுபடியும் நடுங்க- ஏழுலகங்களும் நடுங்குமாறு, விழும் பனம் என ஆகும்-மரத்திலிருந்து விழுகின்ற பனம் பழம்போல் விழுந்துருளச் செய்தவரும்-மருதம் உரைந்த- மருதமரத்தை உதைத்தவரும் ஆகிய, முகுந்தன், அன்புறும்-முக்தியைத் தருகின்ற திருமால் அன்பு கொள்கின்ற, மருக-திருமருகரே! குவிந்து மலர்ந்த பங்கய வயலில்-கதிரவன் மறைவதால் குவிந்து மீளவுந் தோன்றுவதால் மலர்கின் தாமரைகள் நிறைந்த வயலூர் என்னுந் திருத்தலத்திலும், வம்பு அவிழ்-வாசனை வீசுகின்ற, சண்பகம் பெரிய விராலிமலையில்-பெரிய சண்பகத்தருக்கள்