பக்கம் எண் :


60 திருப்புகழ் விரிவுரை

 

நிறைந்த விராலிமலையிலும், விளங்கிய கந்த என்று உனை-வாழ்கின்ற கந்தக் கடவுளே என்று தேவரீரை, மகிழ்வொடு-வந்தி செய்-மகிழ்ச்சியுடன் தொழுகின்ற, மைந்தன் என்றனை-புதல்வனாகிய அடியேனை, வழிவழி அன்பு செய்-வழிவழியாக அன்பு சென்கின்ற தொண்டு கொண்டு அருள்-அடிமை கொண்டருளிய, பெருமாளே-பெருமையிற் மிக்கவரே! கரதலமும்-கையாகிய தலமும் குறிகொண்ட கண்டமும்-நகக்குறியுடன் கூடிய கழுத்தும், விரவி எழுந்து-கலந்து ஆற்றுவதால் மேல் எழுந்து, சுருண்டு-சுருள்பெற்று, வண்டுதிட-பருத்த கூந்தல் குலைந்து அலை,ய அதிபார-மிகவும் பெரிதும், களப சுகந்தம், மிகுந்த-கலவைச் சாந்து பூசப்பட்டு மணங் கமழ்கின்றதும், ஆகிய கொங்கைகள் இளக-தனங்கள் இளகவும், முயங்கி மயங்கி-விலைமகளிருடன் கலந்து மயங்கியும், அன்புசெய் கனி இதழ் உண்டு துவண்டு-அன்பைச் செய்கின்ற கனிபோன்ற இதழமுதைப் பருகி துவண்டும், பஞ்சணைமிசை வீழா- பஞ்சணைமேல் வீழ்ந்தும், இரதம் அருந்தியும், இன்பத்தை யுண்டும், உறும் கருங்கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி-பொருந்தியுள்ள கருமையான அவர்கள் கண்கள் பூசல்செய்து சிவந்து குவியுமாறு, இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி-இதமாகிய உந்தி என்னும் இடத்தில் பொருந்தி அதில் முழுகியும் இனியது ஓர் இன்பம் விளைந்து அளைந்து-இனியதாகிய ஓர் இன்பம் உண்டாகி அதில் கலந்தும், பொய் வனிதையர் தங்கள் மருங்கு இணங்கிய-பொய்யாக அன்பு செய்கின்ற பரத்தையிடத்தில் கூடி வறிதே கெடுகின்ற, இளமை கிழம்படுமுன்-இளமைப் பருவமானது முதுமைப் பருவத்தை யடைவதற்குள், பதம்பெற உணர்வேனோ-தேவரீருடைய திருவடியைப் பெற்றுய்ய உணர்வு பெறமாட்டேனோ?

பொழிப்புரை

பரதக் கூத்திற்கிசைய ஒலிக்கும் சிலம்பு இனிது ஒலிக்கும் அழகிய திருவடியை யுடையவரே! வரிகளை யுடைய முகத்துடன் கூடிய சரடிப்படையுடன் குரங்குப் படைகளும் பணிவிடை செய்து சீதையைத் தேடுதற்கு முயன்ற மலைகளின் வழியே சென்று, ஆடல் பாடல்களுடன் கூடிய இலங்கை கலங்கவும், அழகிய பொன் முடிகளுடன் கூடிய இராவணனுடைய பத்துத் தலைகளும், ஏழுலகங்களும், நடுங்குமாறு பனம் பழம்போல விழுந்தருளவும், போர்செய்தவரும், கிருஷ்ணாவதாரத்தில் மருத மரங்களின் இடையேபோய் அவற்றை உதைத்தவரும், முத்தியைத் தருபவருமாகிய திருமால் அன்பு கொள்கின்ற மருகரே! குவிந்து மலர்கின்ற தாமரைகள் நிறைந்த வயலூர் என்னுந் திருத்தலத்திலும், மணங்கமழ்கின்ற பெரிய சண்பக மரங்கள் மிகுந்த விராலி மலையிலும் விளங்குகின்ற கந்தப் பெருமாளே! என்று துதிசெய்து