பரதநடனத்திற்கு இசைய சிலம்பு முருகவேள் திருவடியில் மிகவும் இனியைாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. “இனியநாத சிலம்பு புலம்பிடும் அருணஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்” - (கமலமாதுடன்) திருப்புகழ் மகுட சிரந்தசமும்:- இராவணன், கும்பகர்ணன், விபீடணன், மூவரும் உடன்பிறந்தவர்கள். முறையே தாமசம், ராஜசம், சத்துவம் என்ற முக்குணங்களாவார். சத்துவகுணமாகிய விபீடணர் பகவானாகிய ஸ்ரீராமரிடம் அடைக்கலம் புகுந்தனர். தாமசம் ராஜசம் என்ற இருவரும் அழிந்தனர். அதில் தாமசகுணமாகிய ராவணனுக்குப் பத்துத் தலைகள். அவையாவன. காமம், குரோதம், லோபம், மதம், மற்சரம், ஈருஷை, டம்பம், மமகாரம், அகங்காரம் என்பன. மருத முதைந்த முகுந்தன்:- இதனைத் திருப்புகழ்விரிவுரை 5-ஆம் தொகுதி 110-ஆம் பக்கத்தில் காண்க. வழிவழி யன்புசெய்தொண்டு கொண்டருள்:- அருணகிரிநாத சுவாமிகள் பல இடங்களில் தன்னை வழிவழியடிமை என்று தெரிவிக்கின்றார்கள். “தஞ்சமாகியெ வழிவழி யருள்பெறும் அன்பினாலுனதடிபுக ழடிமை” “முடிய வழிவழி யடிமை யெனுமுரிமை யடிமை முழு துலகறிய மழலை மொழி கொடுபாடு மாசுகவி முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன முகுள பரி மளநிகில கவிமாலை சூடுவதும்” சீர்பாதவகுப்பு(1) கருத்துரை திருமால்மருகரே! வயலூரிலும் விராலிமலையிலும் வாழ்கின்ற பெருமாளே! பெண்ணாசையிற் சிக்கி இளமை வறிதே கழியுமுன் உணர்வு அருள்வீர். கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி கயி்லை யாளி காபாலி கழையோனி கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி கணமொ டாடி காயோகி சிவயோகி பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி |