பகரொ ணாத மாஞானி பசுவேறி பரத மாடி கானாடி பரவ யோதி காதீத பரம ஞான வூர்பூத அருளாயோ சுருதி யாடி தாதாவி வெருவி யோடமூதேவி துரக கோப மீதோடி வடமேரு சுழல வேலை தீமுள அழுத ளாவி வாய்பாறி சுரதி னோடு சூர்மாள வுலகேழும் திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள திரளி னோடு பாறோடு கழுகாடச் செருவி னாடு வானீப கருணை மேரு வேபரா திருவி ராலி யூர்மேவு பெருமாளே. பதவுரை சுருதி ஆடி தாதா-வேதங்களை அத்யயனம் செய்யும் பிரமன், விவெருவி ஓட-மிகவும் பயந்து ஓடவும், மூதேவிதுரக-மூதேவி அகன்று ஓடவும், கோபம் மீது ஓடி-கோபம் மிகவும் கொண்டு, வடமேரு சுழல-வடதிசையிலுள்ள மேருமலை சுழலவும், வேலை தீ மூள-கடலில் எரிமூளவும், அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு, சூர்மாள-வாய் கிழிய அழுது சப்தத்துடன் சூரபன்மன் இறங்கவும், உலகு ஏழும்-ஏழு உலகங்களும், திகிரி-வட்டமாய், மாதிர ஆவார- திசைகளை மறைக்கின்ற, திகிரி சாய-சக்கிரவாளகிரி சாயவும், வேதாள திரளினோடு பேய்க்கூட்டங்களுடன், பாறோடு-பருந்தும், கழுகுஆட- கழுகுகளும் ஆடவும், செருவில் நாடு-போரை நாடிச்சென்ற, வான்நீப-தூய கடப்ப மலர் மாலை யணிந்த, கருணை மேருவே-கருணையில் மேருமலை போன்றவரே! பார-பெருமை பொருந்திய, திருவிராலி ஊர் மேவு-திருவிராலி ஊரில் எழுந்தருளியுள்ள, பெருமாளே, பெருமையிற் சிறந்தவரே! கரி புர அரி- யானையின் உடலை அழித்தவரும், காம அரி-மன்மதனை அசுழித்தவரும், திரி புர அரி மன்மதனை அழித்தவரும், தீ ஆடி-தீ அபிஷேகங் கொள்பரும், கயிலை ஆளி-கயிலை மலைக்கு இறைவரும், கபாலி-கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், கழையோனி மூங்கிலடியில் தோன்றியவரும், பான் ஆளி- நள்ளருளை உகந்தவரும், கணமொடு ஆடி-பேய்க் கூட்டங்களுடன் ஆடுபவரும், காயோகி-உலகங்களைக் காக்கும் யோகியும், சிவயோகி- சிவயோகியும் பரமயோகி-பெரியயோகியும், மாயோகி-பெருமைமிகுந்த யோகியும், பரிய அராஜடாசூடி-பெரிய பாம்பைச் சடைமுடியில் தரித்தவரும், பகர ஓணாத மாஞானி-சொல்லுதுற்கு அரிய பெரிய ஞானியும், பசு ஏறி-பசவை வாகனமாகக் கொண்டவரும், பரதம் ஆடி-பரத நாடகம் ஆடுபவரும், கான்ஆடி-கானத்தில் நடிப்பவரும், பர-மேலானவரும், |