மலைஉறை-கோனாட்டைச்சேர்ந்த விராலி மலையில் வாழ்கின்ற பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! காம அத்திரம் ஆகீ-மன்மத பாணமாகி, இளைஞர்கள் வாழ்நாள் கொடு போகி-இளைஞர்களுடைய வாழ்நாளைக் கொண்டுபோய், அழகிய காது ஆட்டி-அழகிய காதுகளில் ஆடுகின்ற, பார இரு குழை அளவு ஓடி-கனத்த இரு தோடுகள் வரையும் ஓடிச்சென்று, கார் போல் தவழ்-மேகம் போல் தவழ்ந்து விளங்கும், ஓதி நிழல் தனில்-கூந்தலின் நிழலில் ஆர் வாள் கடை ஈடு கனகொடு-நிறைந்து வாள் முனைபோன்று ஈடு கனம் கொண்டு, கால்ஏற்று-கருநிறம் கொண்டு, வை வேலின் முனை கடை- கூரிய வேலின் முனையில் நுனி போன்று, யமதூதர்-இயமதூதர்களும், ஏமாப்பு அற-இறுமாப்பு நீங்க, மோக இயல் செய்தது-மோகத் தன்மையைச் செய்து, நீலோற்பல ஆசு இல்மலருடன் நேர்-குற்றமில்லாத நீலோற்பல மலருடன் ஒப்பான, ஆட்டம் விநோதம் இடு விழி-நடன விநோதத்தைச் செய்யும் கண்களையுடைய, , மடவார் பால்-பொது மாதர்களிடத்தே, ஏகாபழி பூணும் மருள் அற-நீங்காத பழியைக் கொண்டிருந்த, மயக்கம் அடியேனை விட்டு அகல, நீ தோற்றி-தேவரீர் அடியேன் முன் தோன்றி, முன் ஆளும், அடிமையை-முன்பு ஆண்டஅடிமையாகிய என்னை ஈடேற்றுதலால்-காத்தருளிய காரணத்தால், உன் வலிமையை மறவேனே-உமது அருளின் ஆற்றலை ஒருபோதும் மறக்கமாட்டேன். பொழிப்புரை பெருமாட்டியும், திரிபுரசுந்தரியும், ஊழித் தீயைப் போன்ற கோபமுடைய பயிரவியும், நல்லொழுக்கமுள்ள உத்தமியும், நீல நிறமுடையவரும், தேவலோக முதலிய மூன்று உலகங்கட்கும் தலைவியுமான பார்வதியும் சிறந்த கார்த்திகைப் பெண்கள் அறுவரும் எங்கள் மகனே என்று பாராட்டி வளர்க்க, வடதிசையில் உள்ள திருக்கயிலாயகிரிக்கு தலைவராய சிவபெருமானுக்கு உபதேசமாக, வேத உபநிடதப் பொருளாகிய உண்மை ஞான நெறியையருளிய குருநாதர் என விளங்கும் இளம்பூரணரே! குன்றாத சிவபூசையும், ஆண்மையும், மாறாத தருமகுணமும் என்றும் நிறைந்துள்ள கோனாட்டில் விராலி மலையில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே! மன்மத பாணமாகி, இளைஞர்களுடைய வாழ்நாளைக் கொண்டுபோய், அழகிய காதில் ஆடுகிற இரண்டு குழைகள் வரை ஓடிச்சென்று, மேகம்போல் தவழ்கின்ற கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று, வாள்முனைபோல் வலிமையும், பெருமையும் கொண்டதாய், கருநிறங்கொண்டு, கூரிய வேலின் முனைபோல், யமதூதர்களும், இறுமாப்பு நீங்க மோகத்தை விளைக்கும் குற்றமில்லாத நீலோற்பல மலர் போன்றதாய் நடனவிதம் புரியும் கண்களையுடைய பொது மாதரிடம், நீங்காத |