பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 69

 

பழியைக்கொண்டிருந்த மயக்கம் எனைவிட்டு அகலத்தேவரீர் என்முன் தோன்றி முன்னால் ஆட்கொண்டு உய்யுமாறு செய்த கருணையின் வலிமையை ஒருபோதும் மறவேன்.

விரிவுரை

காமாத்திரம்:-

மன்மதபாணம்உயிர்களை மயக்குவதுபோல், பொது மாதர்களின் கண்கள் இளைஞர்களை மயக்கும் வலிமையுடையது. வாழ்நாளையுண்ணும் கொடுமையுடையது.

இருகுழை அளவோடி:-

கண்கள் நீண்டு காது வரை ஓடிப்புரள்வன.

யமதூதர் ஏமாப்பற:-

இயம தூதர்கள்கண்களைப்பார்த்து, இக்கண்கள் புரியும் கொடுமைக்கு நாம் எம்மாத்திரம் என்று இறுமாப்பு ஒழிகின்றார்கள்.

ஏகாப்பழி பூணுமருளற நீ தோற்றிமு னாளுமடிமையை ஈடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே:-

இது அருணகிரியாரது சரித்திரக் குறிப்பு. சுவாமிகள் உலக நெறியில் உழன்று துன்மடைந்தபோது, முருகவேள் அவர்முன் தோன்றி கருணைபுரிந்து ஆட்கொண்டருளினார்.

“இத்தகைய கருணைத் திறத்தை அடியேன் ஒருபோதும் மறவேன்” என்று நன்றியுணர்வுடன் நவில்கின்றார்.

கோடாச்சிவபூசை பவுருஷ மாறாக் கொடை நாளு மருவிய கோனாடு:-

விராலிமலை கானாட்டில் உள்ள திருமலை. அந்தக் கோனாட்டில் உள்ளவர்கள், குன்றாத சிவபூசையும், ஆண்மையும், இடையறாத கொடைக்குணங்களும் உடையவர்கள்.

கருத்துரை

விராலிமலையுறை முருகா! உமது கருணைத் திறத்தை ஒரு போதும் மறவேன்.

127

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனெனவேமொ ழிந்து
குலாவியவ மேதிரிந்து புவிமீதே