பக்கம் எண் :


70 திருப்புகழ் விரிவுரை

 

எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுதாதரம தாயொ ழுங்கி லொழுகாமல்
கெடாததவ மேமறைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து மடியாமுன்
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை யருள்பாலா
நடாதசுழி மூல விந்து ளாவிவினை ஞான நம்ப
நபோமணி சமான துங்க வடிவேலா
படாத குளிர்சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த பெருமாளே.

பதவுரை

ஏழ் உலகம் ஈனும் அம்பை அருள் பாலா-ஏழு உலகங்களைப் பெற்ற பார்வதியம்மை யருளிய திருக்குமாரரே! நடாத சுழி - நட்டுவைக்கப்பட்டாத சுழி முனை, மூல விந்து-மூலாதாரம் முதலிய ஆதாரங்கள், விந்து ஆகிய இவற்றின், நள் ஆவி வினை-நடுவில் உள் உயிரில் உயிர்க்குயிராய் விளங்கும், ஞான நம்ப-ஞானமூர்த்தியே! நபோமணி சமானதுங்-சூரியனுக்குச் சமானமான ஒளியும் பரிசுத்தமுமுடைய, வடிவேலா-கூரிய வேலாயுதரே! படாத குளிர் சோலை-வெயில் படாத குளிர்ந்த சோலைகள், அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து-ஆகாயம் வரை ஓங்கி உயர்ந்து வளர்ந்து, பசேல் எனவுமே தழைந்து-பச்சென்ற நிறத்துடன் தழைத்து, தினமேதான்-நான் தோறும், விடாது மழை மாரி சிந்த-விடாமல் மழை பெய்வதால், அநேக மலர் வாவி பொங்கு-பல மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள, விராலிமலை மீது உகந்த-விராலி மலைமீது விரும்பி வாழும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! கொடாத வனையே புகழ்ந்து-தருமமே செய்யாத ஒருவனைப் புகழ்ந்து, குபேரன் எனவே மொழிந்து-அவனைக் குபேரன் என்று கூறி, குலாவி அவமே திரிந்து, அவனை மகிழ்ந்து துதி செய்து வீணாகத் திரிந்து, புவி மீது-இந்தப்பூமியின் கண், எடாத சுமையே சுமந்து-சுமக்க முடியாத குடும்பச் சுமையைச் சுமந்து எணாத கலியால் மெலிந்து-நினைக்கவும் முடியாத கொடுமையைத் தரும் கலி புருஷனால் வாடி, எலா வறுமை தீர-எல்லா வறுமைத் துன்பங்களும் தீரும்படி, அன்று உன் அருள் பேணேன்-அந்நாளில் உமது திருவருளை விரும்பாது காலங்கழித்தேன். சுடாத தனம் ஆன கொங்கைகளால்-நெருப்பில் சுடாத