பக்கம் எண் :


72 திருப்புகழ் விரிவுரை

 

எடாதசுமையே சுமந்து:-

அளவுக்கு மேற்பட்ட குடும்பச்சுமை, வியாபாரச்சுமை முதலிய பாரங்களைத் தங்கள் தலையில் சுமந்து பலர் வாடுகின்றார்கள்.

எணாத கலியால் மெலிந்து:-

கலிபுருஷன்மனத்தால் நினைக்க முடியாத அளவு கொடுமையுடையவன். அவன் அநேக கொடுஞ் செயல்களைச்செய்விப்பான். அதனால் மக்கள் மெலிந்து வாடுகின்றார்கள்.

எலா வறுமை தீர அன்று னருள் பேணேன்:-

அறிவில்வறுமை; பொளில் வறுமை; குணத்தில் வறுமை; இப்படிப் பல வறுமைகள் தீர முருகனை ஏத்தி அவருடைய திருவருளை விரும்பாமல் வறிதே வாழ்நாளைத் தொலைத்து விடுகின்றார்கள்.

கிலாத வுடலாவி நொந்து மடியாமுன்:-

இலாத-ஆற்றல்இலாத, வலிமையற்ற உடலில் உயிர் நொந்து இறக்குமுன் முருகா! உன் அருள் வெளிப்பட வேண்டும்.

தொடாய் மறலியே நியென்ற சொலாகியது னாவருங்கொல் சொல்:-

எம்பெருமானே! அடியேனுடைய உயிரை இயமன் பிடிக்க வரும்போது, தேவரீர் அப்போது தோன்றி, “இயமனே! நீ இவன் உயிரைத் தொடாதே, அவன் நம் அடியவன்” என்று கூறும் அருள் உரை உமது நாலில் இருந்து வராதே? அப்படிவரும் என்று எனக்கு ஓர் உறுதிமொழி கூறி யருளுவீராக.

நடாதசுழி மூலவிந்து நளாவிவிளை ஞானநம்ப:-

ஒருவரால்நடப்படாமல் ஆறு ஆதாரங்களிலும் ஊருவியுள்ள சுழிமுனையிலும் விந்துவிலும் இடையில் விளங்கும் உயிர்க்கு உயிராய் இறைவன் விளங்குகின்றான்.

கருத்துரை

விராலிமலை மேவும் வேலவரே! இயமபயம் நீக்கி எனை ஆண்டருளும்.

128

மாயா சொரூப முழுச்ச மத்திகள்
ஓயாவுபாய மனப்ப சப்பிகள்
வாணாளை யீரும் விழிக்க டைச்சிகள் முனிவோரும்
மாலாகி வாட நகைத்து ருக்கிகள்
ஏகாச மீது தனத்தி றப்பிகள்