பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 73

 

வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள்   வெகுமோகம்
ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள்
ஈயாத போதிலறப்பி ணக்கிகள்
ஆவேசநீருண் மதப்பொறிச்சிகள்    பழிபாவம்
ஆமா றெணாத திருட்டுமட்டைகள்
கோமாள மான குறிக்க ழுத்திகள்
ஆசார வீன விலைத்த னத்திய   ருறவாமோ
காயாத பால்நெய்தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
காணாத வாறு குடிக்கும் மப்பொழு    துரலோட
கார்போலு மேனி தனைப்பி ணித்தொரு
போர்போ லசோதை பிடித்தத டித்திட
காதோடு காது கையிற்பிடித்தழு    தினிதூதும்
வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயாமல் மீள அழைக்கு மச்சுதன்
வீறான மாம னெனப்ப டைத்தருள்    வயலூரா
வீணாள்கொடாத படைச்செ ருக்கினில்
சூர்மாள வேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலைத்த லத்துறை   பெருமாளே.

பதவுரை

காயாத பால்-காய்ச்சாத பால், நெய், தயிர் குடத்தினை-நெய் தயிர்க்குடங்கள், ஏயா-பொருந்திய மனத்துடன், எணாமல் எடுத்து-சற்றும் சிந்தியாமல் எடுத்து, இடைச்சிகள் காணாத ஆறு-இடைச்சிமார்கட்குத் தெரியாதபடி, குடிக்கும் அப்பொழுது-குடித்துக் கொண்டிருக்கும் பொழுது, உரலோடே-உரலுடன், கார்போலும் மேனிதனை பிணித்து-நீலமேகம் போன்ற திருமேனியைக் கட்டி, ஒரு போர் போல்-ஒரு போரிடுவது போல், அசோதை- யசோதை, பிடித்து அடித்திட-பிடித்து அடிக்க, காதோடு காது கையில் பிடித்து அழுது-இரண்டு காதுகளையுங் கையில் பிடித்துக் கொண்டு அழுதவரும், இனிது ஊதும் வேயால்-இனிமையாக ஊதுகின்ற புல்லாங்குழலால், அநேக வித பசுதிரள் சாயாமல்-பலவிதமான பசுக்கூட்டங்கள் தவறாதபடி, மீள அழைக்கும் அச்சுதன்-மீண்டுவரும்படி அழைத்துவரும் ஆகிய திருமாலை, வீறு ஆளமாமன் என படைத்து அருள் சிறப்பு வாய்ந்த மாமனாக் கொண்டருளும், வயலூரா-வயலூர்ப் பெருமானே! வீணாள் கெடாத-வீணாக நாள் செலவிழ்க்காமல், படை செருக்கினில்-படைகள் நம்மிடம் இருக்கின்றது என்ற அகங்காரத்துடன் இருந்த, சூர் மாள-