பக்கம் எண் :


74 திருப்புகழ் விரிவுரை

 

சூரபன்மன்மாளும்படி, வேலை விடுக்கும் - கடலில் விடுத்தருளிய, அற்புத வேலா-அற்புதமான வேலாயுதரே! விராலி மலைதலத்து உறை விராலி மலை என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! மாயா சொரூப-மாயையே உருவெடுத்தாற் போன்ற, முழு சமத்திகள்-முழுச் சாமர்த்திய சாலிகள்; ஓயா-உபாய, முடிவே இல்லாத தந்திரம் நிறைந்த, மன பசப்பிக்; வாழ்நாளை ஈரும்-வாழ்நாளை அறுத்து அழிக்கின்ற, விழி கடைச்சிகள்-கடைக்கண்ணினர்; முநிவோரும் மால் ஆகிவாட-முனிவர்களும் மயக்கமுற்று வருந்தும்படி, நகைத்து உருக்கிகள்-சிரித்து அவர்களை உருக்க வல்லவர்கள், ஏகாச மீது-மேலாடையின்மீது, தன திறப்பிகள்-கொங்கையைத் திறந்து காட்டுபவர்கள், வாரீர் இரீர் என் முழு புரட்டிகள்-வாருங்கள், இருங்கள் என்று கூறும் முழு மோசக்காரிகள், ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்- ஆராய்வதற்கு இடமில்லாத ஆசையையும் எழுப்புகின்ற ஏமாற்றுக்கரிகள், ஈயாத போதில்-காசு கொடுக்க முடியாத போது, அறபிணக்கிகள் மிகவும் பிணங்குபவர்கள், ஆவேச நீர் உண்-கள்ளைக்குடிக்கின்ற; மத பொறிச்சிகள் வெறி கொள்ளுகின்ற ஐம்பொறிகளையுடையவர்கள்; பழி பாவம் ஆமாறு எணாத-பழிபாவம் ஆகுமோ என்று எண்ணாத, திருட்டு மட்டைகள்-திருட்டு வீணிகள்; கோமாளம் ஆன-வேடிக்கையான, குறி கழுத்திகள்-நசுக் குறி யமைந்த கழுத்தை யுடையவர்கள்; ஆசார ஈன-ஆசாரம் குறைந்த, விலைதனத்தியர்-விலைக்கு விற்கும் தனத்தை யுடையவர்கள் ஆகிய பொதுமாதர்களின், உறவு ஆமோ-உறவு ஆகுமோ?

பொழிப்புரை

காய்ச்சாத பால், நெய், தயிர்க் குடங்களைச் சற்றும் சிந்தியாமல் எடுத்து, கோபிகைகள் காணாதபடி குடித்தபோது, உரலில் காட்டி நீலமேகம் போன்ற திருமேனியை அசோதை அடித்த போது, இருகாதுகளையும் கையால் பற்றிக்கொண்டு அழுதுவரும், புல்லாங்குழல் ஊதி பலவிதமான பசுக்களை அழைத்தவருமாகிய திருமாலை பெருமை மிகுந்த மாமன் எனக்கொண்ட வயலூர் வள்ளரே! படைகளின் அகங்காரத்தினால் வீணாள்படாமல் இருந்த சூரபன்மன் மாயும்படி அற்புதமான வேலாயுதத்தைக் கடலின் மீது ஏவியவரே! விராலிமலையில் வாழும் பெருமிதமுடையவரே! மாயையின் வடிவான முழுச்சமர்த்திகள், ஒழியாமல் தந்திரம் புரியும் மனத்துடுன் பசப்புகின்றவர்கள்; வாழ்நாளை அறுத்தழிக்கும் கடைக்கண்ணுடையவர்கள்; முனிவர்களும் மயக்கமுற்று வாடுப்மபடிச் சிரித்து மனத்தை உருக்குபவர்கள்; மேலே மூடிய ஆடைக்குமேல் தனங்கள் தெரியும்படி, நிற்பவர்கள்; “வாருங்கள்” “இருங்கள்” என்று கூறும் முழு வஞ்சனைக்காரிகள்; மிகுந்த போகத்தையும்,