ஆராய்ச்சியில்லாத ஆசையையும் எழுப்புகின்ற ஏமாற்றுக்காரிகள்; பணங்கொடுக்க முடியாதபோது அறவே பிணங்குபவர்கள்; மயக்கத்தைத் தரும் கள்ளைக்குடிப்பவர்கள்; பழி பாவம் என்று எண்ணாத திருட்டு மௌடிகள்; வேடிக்கையாக நசுக்குறிகள் அழுத்திய கழுத்தினர்கள்; ஆசாரங் குறைந்த விலைக்கு விற்கும் தனத்தினர்கள் ஆகிய பொது மகளிரின் உறவு நல்லதாகுமோ? ஆகாது. விரிவுரை முநிவோரும் மாலாகிவாட நகைத்து ருக்கிகள்:- முற்றுந்துறந்த முனிவர்களும் தங்களைக் கண்டு மயங்கித் தியங்கி உருகி நிற்குமாறு அழகில் மிகுந்து நிற்பர் பொதுமகளிர். ............................................................”துறந்தோருளத்தை வளைத்துப்பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணார்” -கந்தலங்காரம் (32) விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர்மாயையைக் கண்டு மருண்டார். ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது. திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே, ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார் கூடுவார் போன்றணைவார் குழல் அவிழ இடைநுடங்க ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார். இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். ஆதலால்சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள். ஏகாசம்:- ஏகாசம்-மேற்போர்வை “பொருபூதரமுரித்து ஏகாசமிட்ட புராந்தகர்.” -கந்தலங்காரம் (45) ஆவேசநீர்:- கள்ளை யுண்டவர் ஆவேசம் வந்தவர்போல ஆடுவர். அதனால் ஆவேசநீர் என்றார். |