“ஆவேசநீரைக் குடீத்த துட்டர்கள்” -(ஆசாரவீன) திருப்புகழ் காயாத பால் நெய்..........................அச்சுதன்:- இந்த மூன்று அடிகளில் பாகவதத்தில் கண்ணபிரான் செய்த திருவிளையாடல்களை எடுத்து இனிது கூறுகின்றார் “அளைதயிர் பாலுண்டு கண்டுபிடிக்கப் பிடியுண்டு ஆப்புண்டிருந்தானால்..................................................அடியுண்டழுதனால்.” - பெரியாழ்வார். கருத்துரை விராலி மலை முருகா! மாதர் மயக்கம் கொடியது. அது கூடாது. மாலசை கோப மோயாதெ நாளு மாயா விகார வழியேசெல் மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவு மினிநீயே நாலான வேத நூலக மாதி நானோதி னேனு மிலைவீணே நாள்போய் விடாம லாறாறு மீதில் ஞானோப தேச மருள்வாயே பாலா கலார ஆமோத லேப பாடீர வாக அணிமீதே பாதாள பூமி யாதார மீன பானீய மேலை வயலூரா வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதிசேயே வீரா கடோர சூராரி யேசெ வேளே சுரேசர் பெருமாளே. பதவுரை பாலா-இளைமையானவரே! கலார ஆமோத-செங்குவளை மலரில் பிரியமானவரே! அணிமீதே பாடீர லேப வாக-ஆபரணங்களின் மீது சந்தனக்கலவைப் பூச்சு அணிந்துள்ள அழகரே! பாதாள பூமி ஆதார- பாதலத்துக்கும் பூதலத்துக்கும் பற்றுக் கோடானவரே! மீன பானீய மேலை வயலூரா-மீன் நிறைந்த நீர்சூழ்ந்த மேலை வயலூரில் வாழும் வள்ளலே! வேலா-வேலாயுதரே! விராலி வாழ்வே-விராலி மலையில் |