பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 77

 

வாழ்பவரே! சமூக வேதாள பூதபதி சேயே-கூட்டமான பேய்கள் பூதகணங்கள் இவைகட்குத் தலைவரான சிவகுமாரரே! வீரா-வீரமூர்த்தியே! கடோர சூர அரியே-கொடுமை வாய்ந்த சூரனை அழித்தவரே! செவ்வேளே- செவ்வேட்பரமரே! சுர ஈசர்-தேவர்கட்குத் தலைவராககிய, பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! மால் ஆசை கோபம்-மயக்கம் ஆசை கோபம் என்ற இவை, ஓயாது-ஓய்வு இல்லாமல், எந்நாளும்-எந்நாளும், மாயா விகார வழியே செல் மாபாவி- உலக மாயையாகிய விகார வழியிலே செல்லுகின்ற பெரிய பரவும், காளி-விஷகுணமுள்ளவனும், தானேனும்-இப்படிப்பட்டவனாக அடியேன் இருப்பினும், நாத-தலைவரே! மாதா பிதாவும் இனி நீயே-தாயும் தந்தையும் இனி எனக்கு நீர்தான; நால் ஆன் வேதநூல்-நான்கு வேத நூல்களையும், ஆகம ஆதி - ஆகம முதலிய நூல்களையும், நான் ஓதினேனும் இலை-அடியேன் படித்ததும் இல்லை. வீணே நாள் போய் விடாமல் - வீணாக நாள் போய்விடாத வண்ணம், ஆறாது மீதில் - முப்பத்தாறு தத்துவங்கட்கு அப்பர்ற்பட்ட நிலையில், ஞான உபதேசம் அருள்வாயே-ஞான உபதேசத்தை அருள்புரிவீராக.

பொழிப்புரை

இளங் குமாரரே! செங்கழுநீசர் மலர் மாலையில் அன்புள்ளவரே! ஆபரணங்கள் மீது சந்தனக் கலவை யணிந்துள்ளவரே! பாதலத்துக்கும் பூதலத்துக்கும் தலைவரே! மீன் நிறைந்த தண்ணீர் சூழ்ந்த மேலை வயலூரில் வாழ்பவரே! வேலாயுதரே! கூட்டங்களின் தலைவராய சிவ குமாரரே! வீர மூர்த்தியே! கொடுமையான சூரபன்மனுக்குப் பகைவரே! செவ்வேட் பரமரே! தேவர்தலைவராகிய பெருமிதமுடையவரே! மயக்கம் ஆசை கோப முதலியவை ஓயாது, என்றும் மாயா விகார வழியில் செல்லுகின்ற பெரிய பாவியும் விஷ குணமுள்ளவன் எனினும் தலைவரே! எனக்கு தாயும் தந்தையும் நீர்தான். வேதாகமம் முதலிய நூல்களை அடியேன் ஓதினேனில்லை. வீணே நாள் கழித்து போகாமல் முப்பத்தாறு தத்துவங்கட்கும் அப்பாலுள்ள ஞானத்தை உபதேசித்தருளுவீர்.

விரிவுரை

மாலாசை கோபாம்:-

ஆசை, ஆசையால்கோபமும், கோபத்தால் மயக்கமும் தோன்றும்.

இந்த மூன்று பசையற அற்றால் பிறிவி அறும்.

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
நாமம்கெடக் கெடும் நோய்.                         - திருக்குறள்.