பக்கம் எண் :


78 திருப்புகழ் விரிவுரை

 

“பற்றவா வேரொடும் பசையற பிறவிபோய்”                - கம்பர்

காளி:-

காளம்-விஷம். விஷகுணமுள்ளவன் காளி.

நாலானவேத நூலாகமாதி நானோதினேனுமிலை:-

கற்கவேண்டிய நூல்களில் தலையானவை வேதாகமங்கள். வேதம்-பொது; ஆகமம்-சிறப்பு. சிறிதேனும் வேதாகம ஞானம் பெற வேண்டும்.

மாதா பிதாவும் இனி நீயே:-

“அடியேனுக்கு முருகா! நீதான் தாயும் தந்தையும்” என்கின்றார் அருணகிரிநாதர்.

“மாதாபிதாவினருணல மாறாமகாரி லெனையினி
   மாஞானபோத மருள்செய்         நினைவாயே”
                                      -(ஆசாரவீன). திருப்புகழ்.

“எந்தாயுமெனக்குரள்தந்தையுநீ
   சிந்தாகுலமானவைதீர்த்தெனையாள்”             -அநுபூதி (46)

ஆறாறுமீதில் ஞானபதேசம் அருள்வாயே:-

ஆன்ம தத்துவம்24, வித்யாதத்துவம் 7, சிவ தத்துவம் 5, ஆக 36, இந்த முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த இடத்தில் சென்று உபதேசம் பெற விழைக்கின்றார்.

“ஆறாறையுநீத் தன்மேல் நிலையைப்
   பேறா அடியேன் பெறுமாறுளதோ”                 அநுபூதி (47)

கல்லாரம்:-

கல்லாரம்என்பது சந்தத்தை ஒட்டி கலாரம் என்று வந்தது. கல்லாரம்- செங்குவளை.

முருகனுக்குப்பிரியமான மலர் செங்குவளை, செங்குவளை மலர்வதனால் திருத்தணிக்குக் கல்லார கிரி என்று பேர். அங்கு வாழும் முருகன் செங்கல்வராயன்.

கருத்துரை

விராலிமலை முருகா! ஞானோபதேசம் புரிந்தருள்வீர்.

130

கேம மெனுங்குழல் சாய்த்திரு
கோகனங்கொடு கோத்தணை
மேல்விழு கின்ற பராக்கினி       லுடைசோர
மேகலையுந்தனி               போய்த்தனி
யேகர ணங்களு மாய்க்கயல்