வேல்விழி யுங்குவி யாக்குரல் மயில்காடை கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி கூரவு டன்பிரி யாக்கல வியின்மூழ்கிக் கூடி முயங்கி விடாய்த்திரு பார தனங்களின் மேற்றுயில் கூரினு மம்புய தாட்டுணை மறவேனே மோகர துந்துமி யார்ப்பவி ராலி விலங்கலின் வீட்டதில் மூவுல குந்தொழு தேத்திட வுறைவோனே மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய மோகன சங்கரி வாழ்த்திட மதியாமல் ஆக மடிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி யாமையின் வென்றவ னாற்பிற கிடுதேவர் ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ னாளு லகங்குடி யேற்றிய பெருமாளே. பதவுரை மோகரதுந்துபி ஆர்ப்ப-பெரிய ஆரவாரத்துடன் பேரிகை ஒலி செய்ய, விராலி விலங்கலின் வீடு அதில்-விராலி மலையின் மீதுள்ள திருக்கோயிலில் மூ உலகும் தொழுது ஏத்திட உறைவேனே-மூன்று உலகில் உள்ளோர்களும் வாழ்த்தும்படி வாழ்கின்றவரே! மூதிசை-வட திசையில், முன்பு ஒரு கால்-முன்பு ஒரு முறை, தடமேருவை அம்பினில் வீழ்த்திய-விசாலமான மேருமலையைச் செண்டாயுதத்தால் வீழ்த்திய, மோகன-வசீகரமுடையவரே! சங்கு அரி வாழ்த்திட-சங்கையேந்திய திருமால் வாழ்த்தச் சென்று, மதியாமல்-சூரனை ஒரு பொருட்படுத்தாமல், ஆகம் மடிந்திட-அவனுடைய உடல் அழியும்படி, வேல் கொடு-வேலாயுதத்தைக் கொண்டு, சூரனை வென்று-சூரபன்மனைவென்று, அடல்போய் தணியாமையின் வென்றவனால்-திக்கு விஜயத்தில் போர்க்குப் போய்குறைவுபடாமல் வென்ற சூரபன்மனால், பிறகிடு தேவர்-புறங்கொடுத்து ஓடிய தேவர்களின், ஆதி இளம் தலை காத்து-தலைவனாகிய இந்திரன் மகனாகிய சயந்தனைக் காத்து, அரசு ஆள-அவன் அரசு செய்யும்படி, அவன் சிறை மீட்டு-அவனைச் சிறையிலிருந்து மீட்டு அருளி, அவன் ஆள் உலகம் குடி ஏற்றிய |