பக்கம் எண் :


8 திருப்புகழ் விரிவுரை

 

விராலிமலை

(திருச்சியிலிருந்து மதுரைபோகும் வழியில் 20ஆவது மைலில் உள்ளதலம். சிறியமலை. மலைமேல் ஆறுமுகத்துடன் முருகன் கோயில் கொண்டுள்ளார். திருச்சி, மணப்பாறை முதலிய பல ஊர்களிலிருந்தும் பஸ்வசதி உண்டு. மயில்கள் அதிகம்.)

116

சீரான கோல கால நவமணி
             மாலாபி ஷேக பார வெகுவித
             தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்
       சீராடு வீர மாது மருவிய
             ஈராறு தோளு நீளும் வரியளி
             சீராக மோது நீப பரிமள இருதாளும்
ஆராத கால் வேடர்        மடமகள்
             ஜீமுத மூர்வ லாரி மடமகள்
             ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்
       ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
             ஞானாபி ராம தாப வடிவமும்
             ஆபாத னேனு நாளுனிவைது பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
             மீதேறி மாறி யாடு மிறையவர்
             ஏழேழு பேர்கள் கூற வருபொரு  ளதிகாரம்
       ஈடாய வூமர்போல வணிகரி
             லூடாடி யால வாயில் விதிசெய்த
             லீலாவி சார தீர வரதா குருநாதா
கூராழி யால்முன்        வீய நினைபவ
             னீடேறு மாறு பானு மறைவுசெய்
             கோபால ராய னேய முளதிரு மருகோனே
       கோடாம லார வார அலையெறி
             காவேரி யாறு பாயும் வயலில்
             கோனாடு சூழ்வி ராலி மலையுறை  பெருமாளே.