பக்கம் எண் :


80 திருப்புகழ் விரிவுரை

 

-அவன் ஆட்சிபுரிந்த பொன்னுலகில் குடியேற்றிய, பெருமாளே! பெருமையின் சிறந்தவரே! மேகம் எனும் குழல் சாய்த்து-மேகம் போன்ற கூந்தலைச் சாய்த்து, இரு கோகனங்கொடு கோத்து-தாமரை மலர் போன்ற இரு கண்களைக் கொண்டு இழுத்துச் சேர்த்து, அணைமேல் விழுகின்ற பராக்கினில்-படுக்கைமீது விழுகின்ற விளையாட்டில், உடைசோர-ஆடை நெகழவும், மேகலையும் தனி போய்-தனியே மேகலாபரணமும் நீங்கவும் தனிய கரணங்களும் ஆய- தனிப்பட்டு மனம் முதலிய கரணங்கள் ஒன்றுபடவும், கயல் வேல் வழியும் குவியா-மீனையும் வேலையும் போன்ற கண்கள் குவியும், குரல் மயில் காடை கோகிலம் என்று எழ-மயில்காடை குயில் போன்ற ஒலி குரலில் எழவும்., போய்கனி வாய் அமுது உண்டு உருகா-சென்று மாதர்களின் கனிபோன்ற அதரத்தின் அமுதத்தைப் பருகியுருகியும், களிகூர-மகிழ்ச்சிமிகவும், உடம் பிரியா கலவியில் மூழ்கி-உடனாகவேயிருந்து நீங்குதல் இல்லாத புணர்ச்சியின்பத்தில், இரு பார தனங்களில் மேல் துயில் கூரினும்-பெரிய இரு கொங்கயைின்மீது மோகத்தூக்கம் புரிந்தாலும், அம்புயதாள் துணை மறவேனே- உமது இரு தாமரைகள் போன்ற திருவடிகளை அடியேன் மறக்கமாட்டேன்.

பொழிப்புரை

பெரிய ஆரவாரத்துடன் பேரிசை ஒலிக்க விராலிமலைக் கோயிலில் மூன்று உலகத்தவரும் வணங்கி வாழ்த்தும்படி வாழ்கின்றவரே!வடதிசையில் உள்ள விசாலமான மேருமலையை முன் ஒரு சயமம் செண்டினால் வீழ்த்திய வசீகரமுடையவரே! திருமால் வாழ்த்தச் சென்று சூரபன்மனுடைய உடல் அழியும்படி வேலினால் வென்ற, அவனிடம் புறங்கொடுத்து ஓடிய தேவர்களின் தலைனாகிய இந்திரனுடைய புதல்வன் சயந்தனைக் காத்தருளி, அவனைச் சிறை மீட்டு, பழையபடி ஆட்சி புரியும்படி பொன்னுலகில் குடியேற்றிய பெருமிதம் உடையவரே! மேகம் போன்ற கூந்தலைச் சாய்த்து, தாமரை மலர் போன்ற இருகண்களை கொண்டு ஈர்த்துச் சென்று படுக்கை மீது விழுகின்ற விளையாட்டில் ஆடை நெகிழவும், மேகலாபரணம் நீங்கவும், கருவி கரணங்கள் ஒன்றுபடவும், மீனையும் வேலையும் ஒத்த கண்கள் குவியும், மயில் காடை குயில் போன்ற ஒலி குரலில் எழவும், பொது மாதருடைய அதர பானஞ் செய்தும், மகிழ்ச்சி மிகுந்து புணர்ந்து இளைத்து இரண்டு கொங்கைகளின் மேல் மோகத்துயில் புரிந்தாலும் உமது திருவடித் தாமரைகளை அடியேன் மறக்கமாட்டேன்.