பக்கம் எண் :


84 திருப்புகழ் விரிவுரை

 

“தொழுது வழிபடு மடியர் காவல்காரப் பெருமாளே”
                                            - (ஒருபொழுதும்) திருப்புகழ்.

அடிமை காண வருவதினி யெந்தநாளோ:-

“கால தூதர் பற்றி யிழுக்காமுன் தேவரீர் அடியேன் முன் ஓடிவந்து காட்சிதருவது எந்த நாயோ” என்று சுவாமிகள் ஏங்குகின்றார்.

ஆதிமறையவனும்:-

“தீயோம்பு மறை வாணர்க் காதியாம் திசைமுகன்”      - சம்பந்தர்.

"ஆதிப்பிரமனுநீ”                   -கம்பர்.

மறையவர்கட்குத் தலைவன் பிரமதேவன்.

உந்தி சோலை செறிவுள:-

உந்தி-காட்டாறு

ஆறுகளும் சோலைகளும் சூழ்ந்துள்ள அரிய தலம் விராலிமலை.

கருத்துரை

விராலிமலை மீது மேவும் பெருமானே! உமது தரிசனந்தந் தருள்வீர்.

கொடுங்குன்றம்

இது இப்போது பிரான்மலை என வழங்குகின்றது. திருஞான சம்பந்தருடைய தேவாரம் உடையது.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற திருத்தலத்துக்கு வடமேற்கே 15 கல் தொலைவில் உள்ளது. இத்தலத்தில் அருணகிரிநாதருக்கு முருகன் திருநடனம் செய்து காட்சி தந்தருளினார்.

132

அனங்க னம்பொன்ற ஞ்சுந் தங்குங் கண்களாலே
அடர்ந்தெழும் பொன் குன்றங்கும்பங் கொங்கையாலே
முனிவந்து மன்றங்கண்டுந் தண்டும் பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் றின்புறாதோ
தெனந்தெனந்தெந்தெந்தெந் தெந்தெந் தெந்தெனானா
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் தும்பிபாடக்
குனிந்தி லங்குங்கொம்புங் கொந்துந் துன்றுசோலை
கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் தம்பிரானே.