அவனை அவனுக்குரிய தொழிலைப் புரியுமாறு பணிந்தருளினார் அதனால் அனங்கண் ஆயினான். அம்பொன்றஞ்சுந்தங்குங் கண்கள்:- மன்மதனுடைய கணைகள் ஐந்து மலர்கள். அவை மயக்கம், முதலிய ஐந்து வினைகள் செய்யும். இந்த மலர்க்கணைகள் செய்யும் ஐந்தொழில்களையும் விலைமகளிரது கண்கள் செய்யும். அதனால் அக்கணைகள் தங்குங் கண்கள் என்று கூறினார். முனிந்து மன்றங் கண்டுந் தண்டும்:- விலைமகளிர்தம்பால் வந்து பழகிய ஆண்கள் பணந்தரச் சிறிது பின்வாங்குவார்களாயின், பொதுவாகவுள்ள நியாய சபையில் சென்று வழக்கினைக் கூறிப் பொருளை வசூலிப்பார்கள். முடங்குமென்றன் தொண்டுங்கண்டின்றின்புறாதோ:- மாமதர்மயலால் தடைபட்ட அடியேனுடைய தொண்டினைக் கண்டு, முருகா! உனது திருவுள்ளம் கருணையினால் மகிழ்ந்து இன்பம் அடையவேணும். நும்பி பாடக்குனிந்திலங்குங் கொம்பு:- வண்டுகள்பாடுவதனால், அப்பாடலின் இனிமைக்காக அசரமாய மரக்கொம்புகளும் உருகி வளைகின்றன. இது இசையின் பெருமையைத் தெரிவிக்கின்றது. இசைக்குச்சராசரங்கள் அனைத்தும் ஈடுபடும் என்பதை ஆனாயர் சரிதையாலும் தெரிக. இன்றும் நல்ல வாத்தியங்களில் ஒலியால் பயிர் வளர்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கருத்துரை கொடுங்குன்றத்தில் மேவிய குமாரக் கடவுளே! அடியேனுடைய தொண்டினை ஏற்று அருள்புரியும். எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது குத்தித்தி றந்துமலை யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி முத்துச்செறிந்தவ் மெனுநிகள மறையறவு தைத்திட்ட ணைந்துகிரி னிற்கொத்து மங்குசநெ ருங்குபாகர் எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப |