முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய மிக்கக்க வந்தநிரை தங்கியாட முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர வுக்ரப் பெருங்குருதி முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ டிக்கத்து ணிந்ததிர முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி வெட்டிக்க ளம்பொருத தம்பிரானே பதவுரை திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி தத்தத்த தந்ததத தெதததெந தெதததெத தெத்தெத்ததெந்ததெத திக்கட்டி கண்டிகட ஜெகணகெண கெண ஜெகுத தெத்தித்ரி யந்திாதித தக்கத்த குந்தகுர்த திந்தி தீதோ திகுடதிகு தொகுட திகுதொகுட தொகு திக்கட்டி கண்டிகட டக்கட்டகண்டகட டுண்டுட்டு டுண்டுடுடு திகுகுதிகு திகுகுகுகு திக்குத்திந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம்-திதிதிதி.....குங்குகுகு என்ற ஒலியுடன் தாளங்கள், முதிர்திமிலை- முற்பட்டொலிக்குந் திமிலை, சுரடிகை-கரடிகை, இடக்கை-இடக்கை, கொடுந்துடி உடுக்கை-வளைந்த துடியென்ற உடுக்கை, பெரும்பதனை-பெரிய பதலை, முழவு பல மொகு மொகு என ஒத்தி-முரசு முதலிய வாத்தியங்கள் மொகு மொகு என்று ஒலிக்கவும், கொடும் பிரமகத்திகளும் பரவ-கொடிய கொலைத் தொழிலால் ஏற்பட்ட பேயுருவங்கள் தேபாற்றவும், முகடுபுகும்-மேலே உச்சியில் புகும், வெகுகொடிகள்-பல கொடிகள், பக்கத்து எழுந்து அலைய-பக்கங்களிலே பறந்து எழுந்து அலையவும், மிக்க கவந்த நிரைதங்கிஆட-அதிகமாக வந்தங்களின் வரிசை அங்கங்கு தங்கி ஆடவும், முதுகழுகு-பழைய கழுகுகள், கொடி-காகங்கள், கருடன்-கருடன்கள், ஒக்கத் திரண்டுவர-இவை யாவும் ஒன்றுகூடித் திரண்டுவரவும், உக்ர பெரும் குருதி முழுகி எழும்-உக்கிரத்துடன் பெரிய உதிர வெள்ளத்தில் முழுகி எழுகின்ற, பயிரவர் நடித்திட்டு-பயிரவர் நடனஞ்செய்யும். அகண்டமும் வெடிக்க-அண்டங்கள் எல்லாம் வெடிபடவும், அதிர-பூமி அதிரவும், துணிந்து, முடுகிவரு-துணிவுடன் முடுகி வந்த, நிசிசரரை முட்டி சிரம் திருகி-அசுரர்களின் தலைகளைத் தாக்கித் திருகி, வெட்டிகளம் பொருத- வெட்டிப் போர்க்களத்தில் போர் புரிந்த, தம்பிரானே- தனிப்பெருந்தவைரே! எதிர் பொருது கவி- |