ஏர் ஆரும்-அழகு நிறைந்த, மாட கூட மதுரையில் மீது-மாட கூடங்களுடன் கூடிய மதுரையம்பதியில், ஏறி மாறி ஆடும் இறைவர்- வெள்ளியம்பலத்திலேறி கான்மாறியாடிய கண்ணுதற் கடவுள், ஏழ் ஏழு பேர்கள்-நாற்பத்தொன்பது சங்கப்புலவர்கள், கூற வரு பொருள் அதிகாரம்- உறைவகுத்துக் கூறுமாறு அருளிய பொருளதிகாரத்தின், ஈடு ஆய- அவ்வுரைகளுள் சிறந்ததனை ஆய்ந்துரைக்கும் பொருட்டு, ஊமர் போல வணிகர் இல் ஊடாடி-ஊமைப்பிள்ளையைப்போல் உருத்திரஜன்மர் என்ற திருநாமத்துடன் செட்டி வீட்டில் தோன்றி விளையாடி, ஆலவாயில்- மதுரையம்பதியில், விதி செய்த லீலா-உரைகளின் தாரதம்மியத்தைப் பகுத்து வெளியிட்ட திருவிளையாடலைச் செய்தவரே! விசார-ஆராய்ச்சியுடையவரே! தீர-தைரியத்தை உடையவரே! வரதா-வரத்தையருள்பவரே! குருநாதா உலகங்களுக்கெல்லாம் குருமூர்த்தியாக விளங்குபவரே! முன் வீய நினைபவன்- முன்னாளில் தான் கூறியபடி, “சயத்ரதனைப் பொழுது போவதற்குள் கொல்லா தொழியின் இறந்துபட்டொழிவேன்” என்று எண்ணிய அருச்சுனன், ஈடேறுமாறு, இறவாது உய்வு பெறும் பொருட்டு, கூர் ஆழியாமல் பாநு மறைவு செய்- கூர்மை பொருந்திய சக்கரப் படைக்கலத்தால் சூரியனை மறைத்தருளிய, கோபாலராயன்-யதுகுலத்தலைவராகிய கண்ணபிரானுடைய, நேயம் உள்ள திருமருகோனே-அன்புடைய திருமருகரே! கோடாமல் ஆரவார அலைஏறி- எக்காலத்தும் குறைவின்றி ஆரவாரத்துடன் அலைகளை வீசிப்பெருக்கெடுத்து ஓடுகின்ற, காவேரி ஆறு பாயும் வயலிலில்-காவேரி நதிபாய்ந்து வளஞ்செய்கின்ற வயலூர் என்னும் புண்ணியதலத்திலும், கோனாடு சூழ்- கோனாடு என்னும் திருநாடு சூழப்பெற்ற, விராலி மலை-விராலி மலையிலும், உறை பெருமாளே-வாழ்கின்ற பெருமையின் மிக்கவரே! சீர்ஆன-சிறப்பு வாய்ந்ததும், கோலகால-கோலாகலத்துடன் கூடியதும், நவமணி மாலா-ஒன்பது மணிகளின் வரிசையினால் பொலிவதும் ஆகிய, அபிஷேகபார-திருமுடிகளைத் தாங்கி விளங்குவதும், வெகு வித தேவ-அநேகவகைப்பட்ட அமரர்களும், அதிதேவர்-தேவர்களின் தலைவர்களும், சேவை செயும்-சேவித்து வணங்கும், மலர் முகம் ஆறும்-தாமரை மலர்போன்ற ஆறு திருமுகங்களையும். சீர் ஆடு வீர மாது மருவிய-பெருமை நிறைந்த வீர இலக்கு தழுவி வாழ்கின்ற, ஈராறு தோளும்-பன்னிரு புயாசலங்களையும், நீளும் வரி அளி-நீண்ட வரிகளுடன் கூடிய வண்டுகள், சீராகம் ஓது-ஸ்ரீராகம் என்னும் பண்ணைப்பாடி மொய்த்திருக்கின்ற, நீப பரிமள-கடப்ப மலர்களால் மணமிகுந்த, இருதாளும்- இரண்டு திருவடிகளையும், ஆராத காதல் வேடர் மட மகள்-தணியாத காதலுடன் கூடிய வேடர் குலுக்கொழுந்தாகிய வள்ளியம்மையாரும், ஜீமுதம் ஊர்-மேகத்தின் மீது |