பக்கம் எண் :


90 திருப்புகழ் விரிவுரை

 

அருள்பாலிக்கும் முருக வேளை, சுத்த கொடுங்கிரியில்-தூய கொடுங்குன்றத்தில், நிர்த்த சரண்களை-எனக்கு நீர் காட்சி யளித்து நடனஞ்செய்த திருவடிகளை, மறந்திடேனே-ஒருபோதும் மறக்கமாட்டேன்.

பொழிப்புரை

திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத தெதததெத தெதததெ தெந்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த தந்தகுர்த திந்திதீதோ திகுடதிகு தொகுட தொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட டிடிடுடுடுடு டுண்டுடுடு திகுகுதிகு திகுகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்குகுங்குகுகு என்று தாள ஒத்துடன், முற்பட்ட திமிலை, கரடிகை இடக்கை, வளைந்த துடியாகிய உடுக்கை, பெரிய தபலை பேரிகை முதலிய வாத்தியங்கள் பலமொகுமொகு என்று ஒலிக்கவும், கொடிய பிரமகத்திப் பேய்கள் போற்றவும், மேலே உச்சியிற் பறக்கும் கொடிகள் பக்கத்தில் பறந்து அலையவும், அதிகமாக கவந்தங்களின் வரிசை அங்கங்கே தங்கியாடவும், பழைய கழுகுகளும், காக்கைகளும், கருட்னகளும் ஒன்றுகூடி வரவும், உக்கிரத்துடன் பெரிய உதிர வெள்ளத்தில் முழுகி ஒழுகின்ற பயிரவர்கள் நடனஞ்செய்யவும், உலகம் யாவும் வெடி படவும், பூமி யதிரத் துணிந்து வந்த அசுரர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களின் தலைகளைத் திருகியும் வெட்டியும் போரில் அமர செய்த தனிப் பெருந்தலைவரே! எதிர்த்துப் போர் புரிவது போல் (கவசம்போல்) மூடப்பட்டுள்ள வலிய இரவிக்கையுடன் போர் புரிந்து, அதைக்குத்தித் திறந்து, மலையே இவை என்று இருக்கின்றனவும் கஸ்தூரி ஒழுகவும், முத்துமணிகளாலாய மாலையாகிய சங்கிலிகள் இற்றுப்போகும் படி இடித்து, நகங்களாகிய அங்குசத்துடன் நெருங்குகின்ற பாகர்களாகிய இளைஞர்கள் எதிர் நின்று புகழவும், மார்பை மிதித்து உழக்கிக் கிடந்தும், கண்டோர்களின் உடல் பதைக்கும்படி அடக்கியும், இரதியின் கணவனாகிய மன்மதனுடைய மணிமகுடத்தை மோதியும், முக்கண்ணரும் அஞ்சும் படிப் பருத்தும் நெகிழ்ந்தும் இளைஞரின் உயிராகிய கவளத்தை யுண்பதும் வட்ட வடிவுடன் நின்று அசைந்து முன்னே பருத்தும் பொருதற்கு உற்றளவும் ஆகிய யானை போன்ற கொங்கைகளை பொதுவில் நின்று விலைக்கு விற்கும் மாதர்களுடைய தாமரை மலர் போன்ற கரங்களைத் தழுவி, ஒருசேர நெகிழ்ந்து, படுக்கையிற் சேர்ந்து, வரிபரந்துள்ள