பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 91

 

நச்சுக்கண்கள்சிவக்கவும், அமுதம் போன்ற மொழிகள் குழறவும், கூந்தல் அவிழவும், முத்தந் தந்து அன்புடன் மேல் வீழ்ந்து, புதுமையைத் தரும் புணர்ச்சி வலையிற்பட்டு உயிர் தடைப்பட்டு ஆசையாகிய இருட்கடலில் துன்புற்று, இந்திரியும் தங்கும் இந்த உடம்பாகிய கூடு அழிந்து போகும் பொழுதிலும், அருள் பாலிக்கும் முருகவேளே! தூய கொடுங்குன்றத்தில் அடியேனுக்குக் காட்டி யருளிய திருநடனத் திருவடியை அடியேன் மறவேன்.

விரிவுரை

இந்தத்திருப்புகழின் முற்பகுதியில் மாதரின் தனத்தை யானையாக உருவம் புரிகின்றார். 1087-வது திருக்குறளிலும் இந்தக் கருத்து வருகின்றது.

யானையின்முகபடாம் இரவிக்கை யென்றும், கஸ்தூரி மதம் ஒழுகுவது என்றும், முத்துமாலையான சங்கிலிகளை யறுப்பது என்றும், இளைஞர்கள் அதை யடக்கும் பாகர்கள் என்றும், அவர்களின் கை நகம் அங்குசம் என்றும், இளைஞரின் உயிர் யானையுண்ணும் கவள மென்றும் சமர்த்தாகக் கூறுகின்றார்.

அழிபொழுதினிலும் அருள்முருக சுத்தக் கொடுங்கிரியினிர்த்தச் சரண்களை மறந்திடேனே:-

அருணகிரிநாதருக்கு கொடுங்குன்றத்தில், திருநடன தரிசனந் தந்தருளினார்.

“அந்த நடனகோலத்தை உயிர் போம் பொழுதும் மறவேன்”

என்று சுவாமிகள்கூறுகின்றார்கள்.

இத்திருப்புகழின் பிற்பகுதி போர்க்கள வருணனை.

கருத்துரை

கொடுங்குன்றக் குமரா! உன் திருநடனப் பதமலரை ஒரு போதும் மறவேன்.

குன்றக்குடி

134

அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
அமுத புஞ்ச இன்சொல் மொழியாலே
அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
டணிச தங்கை கொஞ்சு நடையாலே
சுழியெறிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து