தொடுமி ரண்டு கண்க ளதனாலே துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள் துயரை யென்றொழிந்து விடுவேனோ எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி யெதிர டைந்தி றைஞ்சல் புரிபோதே இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க மொழிய வென்ற கொண்டல் மருகோனே மழுவு கந்த செங்கை அருனு கந்தி றைஞ்ச மனுவி யம்பி நின்ற குருநாதா வளமி குந்த குன்ற நகர்புரத்து துங்க மலைவி ளங்க வந்த பெருமாளே. பதவுரை எழுது-அடைக்கலம் புகும் பொருட்டு எழுந்து, கும்பகன் பின் இளைய தம்பி-கும்பகர்ணனுடைய இளைய தம்பியாகிய விபீஷணன், நம்பி - நம்பிக்கையுடன், எதிர் அடைந்து-ஸ்ரீராமருடைய எதிரில் வந்து சேர்ந்து, இறைஞ்சல் புரிபோதே-வணங்கிய சமயத்தில் இதம் மகிழ்ந்து, இதயம் மகிழ்ந்து, இரகசியங்களை எடுத்துரைக்க, வென்ற-வெற்றிபெற்ற, கொண்டல்-மேக நிறத்தராம் இராமரது, மருகோனே-திருமருகரே! மழு உகந்த செம்கை-மழுவை மகிழ்ச்சியுடன் ஏந்தும் சிவந்த கரத்தையுடைய, அரன் உகந்து இறைஞ்ச- சிவபெருமான் மகிழ்ச்சியுடன் வணங்க, மநு இயம்பி நின்ற குரு நாதா-பிரணவ மந்திரத்தை உபதேசித்து நின்ற குருநாதரே! வளம் மிகுந்த-வளமை மிகுந்த, குன்றநகர் புரந்து-குன்ற நகரைக் காத்து, துங்கமலை-விளங்க வந்த தூய அம்மலையில் வீற்றிருந்தருளும், பெருமாளே-பெருமையில் மிகுந்தவரே! அழகு எறிந்த-அழகு வீசும், சந்த்ர முகவடம் கலந்து-சந்தினைப் போன்ற முகவட்டத்தின்றும், அமுத புஞ்ச இன்சொல் மொழியாலே-அமுதம் போன்ற திரண்ட இனிய செஞ்சொல் பேச்சினாலே, அடி துவண்ட தண்டை பாதத்தில் தெளிந்து கிடக்கும் தண்டை, கலீல் எனும் சிலம்பு-கலீல் என ஒலிக்கும் சிலம்பு, அணி சதங்கை-அழகிய சதங்கை, கொஞ்சு நடையாலே-இந்த ஆபரணங்கள் கொஞ்சி ஒலிக்கின்ற நடையாலே, சுழி எறிந்து நெஞ்சு சுழல- உள்ளமானது நீர்ச்சுழிபோல் சுழல, நஞ்சு அணைந்து தொடும்-நஞ்சைக் கலந்திருக்கின்ற, இரண்டு கண்கள் அதனாலே-இருக்ணகளாலே அடியேன் கலங்கி, துணை நெருங்கு கொங்கைகளை உடைய பெண்களின், துயரை என்று ஒழிந்து விடுவேனோ-மயக்கத்தால் வரும் துன்பத்தை என்று அடியேன் விடுவேனோ? |