எந்தைநீ யாயுநீ எம்மு நீயுயர் வந்தனைத்தெய்வம்நீ மற்று முற்றும்நீ இந்திரப்பெரும்பதம் இழக்கின்றாய்என நொந்தனன்ஆதலால் நுவல்வ தாயினேன். “அண்ணா! எனக்குத் தந்தை, தாய், தமையன், தெய்வம் எல்லாம் நீதான். இந்திரனுக்கும் எய்தா இனிய பதத்தை இழக்கின்றாய் என்று உள்ளம் உலைந்து உரைக்கின்றேன்” என்கின்றார். இவருடைய அறிவுரைகளை இராவணன் கேட்டிருந்தால் அவன் அழிந்திருக்க மாட்டான். முறைக்காய்ச்சல் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விபீஷணர் கூறிய இன்னுரைகள் அவனுக்குக் கசந்தது. அவரை வாள் கொண்டு வெட்டப் போனான். விபீஷணர்அவனைத் துறந்து, தென் கடற்கரையில் அமர்ந்துள்ள இராமரைச் சரணாகதி யடைந்தார். இவரை இராவணன்தம்பி என்று கூறாமல் கும்பகர்ணன் தம்பி யென்று சுவாமிகள் குறிப்பிடுகின்றார். ஏன்? கும்பகர்ணன்உள்ளத்தால் உயர்ந்தவன். தன் தமையனுக்குப் பல முறை நீதி நெறிகள் இடித்து இடித்து எடுத்துரைத்தான். ஆகில பரதாரமவை அஞ்சிறையை டைப்போம் மாசில்புகழ்காதலுறு வோம்வளமை கூரப் மேசுவது மானம்இடை பேணுவது கருமம் கூசுவது மாநுடரைநன்று நம கொற்றம் ஆனதோ வெஞ்சமம் அளவில் கற்புடை சானகி துயர்இன்னந் தீர்ந்த தில்லையோ வானமும்வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ புகுந்ததோ பொன்றுங் காலமே. இவ்வாறு இனிய அறிவுரை கூறி, போர்மூண்டு விட்டபடியால் தமையனுக்காகப் போர்புரிந்து, உயிரைத் தியாகம் புரிந்தான் கும்பகர்ணன். அதனால்கும்பகர்ணனுடைய தம்பி என்று கூறுகின்றார். இதமகிழ்ந்து:- இதயம் மகிழ்ந்து என்ற சொல் இதம் மகிழ்ந்து என வந்தது. அன்றி இதமாக மகிழ்ந்து என்றுங் கொள்ளலாம். இலங்கை யசுரர் அந்தரங்கமொழிய:- வீடணன் அடைக்கலம் புகுந்தபின் இராமர் அவரைப் பார்த்து, ஆர்கலி இலங்கையின் அரணும் அவ்வழி வராகெழு கனைகழல் அரக்கன் வன்மையும் |