தார்கெழு தானையின் அளவம் தன்மையும் நீர்கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான். இப்படி இராமர் இலங்கை வாழ் அசுரரது அளவையும் ஆற்றலையும் கூறுமாறு வினாவினார். விபீஷணர் அவையனைத்தையும் விவரமாக விளம்பினார். அரனுகந்திறைஞ்ச மநுவிளம்பிநின்ற:- மநு-மந்திரம். அரன்-பாவங்களைப் போக்குபவர். ஹர ஹர என்ற நாமம் எங்கு ஒலிக்கப்படுகின்றதோ அங்கு துயரம் அகலும். “எல்லாம் அரன்நாமமே சூழ்க; வையகந்துயர் தீர்கவே - திருஞானசம்பந்தர். கருத்துரை குன்றக்குடி மேவுங் குருபரா! மாதராசையவிட அருள் செய்வீர். ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய தந்தத்தி னைத்தடிவ தொந்தத் திரத்தையுள அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும் அம்பொற் பதத்தர்தனு வம்பொற் பொருப்படர்வ களபபரி மளமெழுகும் எழிலில் முழு குவமுளரி யஞ்சப் புடைத்தெழுவ வஞ்சக் கருத்துமத னபிஷேகங் கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ இன்பச் சுடர்க்கனக கும்பத்தரச்செருவ பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர் புந்திக் கிடர்த்தருவ பந்தித் தகச்சடர்வ கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர் சங்கிப்பி முத்தணிவ பொங்கிக் கனத்தொளிர்வ முலைமாதர் வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத மொன்றிக்க ருத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழ லசையருசி யமுர்தக்கருத வசியமொழி மயில்குயிலெ னும்புட் குரற்பகர வம்புற்ற மற்புரிய வருமறலி யரணமொடு முடுகு சமர் விழியிணைகள் |