வேதங்களும் புகழ்கின்ற பெரியவரும், ஞெகிழி கல கல கல எனும்-சிலம்பு கல கல என ஒலிக்கும், அம் பொன் பதத்தர்-அழகிய சிறந்த திருவடிகளையுடையவருமாகிய சிவபெருமான் ஏந்திய, தநு அம்பொன் பொருப்பு அடர்வ-வில்லாகிய அழகிய பொன் மலையாகிய மேருவைத்தாக்க வல்லனவும், பரிமள களப மெழுகும், நறுமணமுள்ள களப் சாந்து பூசப்பட்ட, எழிலில் முழுகுவ-அழகில் முழுகுவனவும், முளரி அஞ்சு புடைத்து எழுவ- தாமரையின் மொட்டு அஞ்சும்படி பருத்து எழுவனவும், வஞ்ச கருத்து மதன்- வஞ்சனையுள்ள எண்ணத்தையுடைய மன்மதனுடைய, அபிஷேகம்-முடியை, கடிவ-அடக்கவல்லனவும், படு கொலை இடுவ-பொல்லாத கோலைத் தொழிலுக்கு இடங்கொடுப்பனவும், கொடிய முகபடம் அணிவ-கொடிதான மேலாடை அணிவனவும், இன்பசுடர்-இன்பந்தரும் ஒளி பொருந்திய, கனக கும்பதர செரு-தங்கக்குடத்துடன் தக்கபடி போர் புரிவனவும், பிருதில்-வெற்றிச் சின்னமாக, புளகித சுகமும்-புளகாங்கித சுகத்தாலும், மிருது உள்ளமும்- மென்மையாலும், வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ-வளர்கின்ற இளைஞர்களின் புத்துக்கு வருத்தத்தைத் தருவனவும், பந்தித்த கச்சு அடாவ்- கட்டப்பட்ட இரவிக்கையால் நெருக்குண்பனவும், கயல் மகர-கயல்மீனும் மகரமீனும், நிகரம் கூட்டமாக, மிக வியன் மருவு-மிகுந்துள்ள பெருமையுடைய, நதியில் முதிர்-ஆற்றில் முதிர்ந்துள்ள, சங்கு இப்பி முத்து அணிவ-சங்கு இப்பி முத்து இவற்றை அணிவனவும், பொங்கி கனத்து ஒளிர்வ-மேலெழுந்து பாரங்கொண்டு விளங்குவனவுமாகிய, முலை மாதர்-தனங்களையுடைய மாதர்கள், வகுள மலர்-மகிழம்பூ, குவளை இதழ் தருமணமும்-குவளை மலரின் இதழ்கள் தருகின்ற மணமும் மிருகமதம் ஒன்றி-கஸ்தூரியுங் கலந்து, கருத்து முகில் வென்றிட்டு-கருநிறத்தால் மேகத்தையும் வென்று, நெய்த்த குழல் அசைய-வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசையவும், ருசி அமிர்த க்ருத-சுவையுள்ள அமுதமும் நெய்யும் போல், வசிய மொழி-வசியஞ் செய்யும் மொழியானது, மயில் குயில் எனும் புள் குரல் பகர-மயில் குயில் என்கின்ற பறவைகளின் குரலைக் காட்டவும், வம்பு உற்றமல் புரிய-வம்புத் தனமாகக் கலவிப் போர் புரியவும், வருமறலி அரணமொடு-வருகின்ற இயமனுடைய வேலையொத்து, முடுகு சமர் விழி இணைகள்-முடுகிப் போர் புரியும் இரு கண்களும், கன்றி சிவக்க-மிகவும் சிவக்கவும், மகிழ் நன்றி சமத்து-மகிழ்ந்து கொடுத்த பொருளுக்கு நன்றி பாராட்டுவதான கலவிப் போரில், நக நுதி ரேகை வகை வகை மெய் உற-நகத்தின் நுனிக் குறிகள் வகை வகையாக உடலிற் பொருந்தவும், வளைகள் கழல-வளைகள் கழன்று விழவும், இடைதுளை-இடுப்பு நெகிழ்ச்சியுறவும், இதழ் உண்டு-அதரத்தைப் பருகி, உள் ப்ரமிக்க-உள்ளம் அதிசயம் அடையவும், நகை கொண்டு-ஆசைபூண்டு, அணைத்து அவதி நெறி- பொருந்தி அணைக்கும் துன்பம் நிறைந்த, கலவி வலையில்-புணர்ச்சி வலையில், எனது அறிவு |