பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 99

 

உடையகலைபடுதல் உந்தி-என்னுடைய அறிவு கொண்டுள்ள கலைகள் அழிவுபடுதல் நீங்கி, பிறப்பு அற அடியேனுடைய பிறப்பு அற-திருவுளத்தில் கருதி, இட்டம் உற்று-என்மீது அன்பு வைத்து, உன் அடி-உமது திருவடியை, வயலி நகர் முருக-வயலூர் வாழும் முருகவேளே! செரு முயல் பன் இருகர- போருக்கு முயலும் பன்னிரு கரங்களையுடையவரே! குமர-குமாரக் கடவுளே! துன்று அட்ட சிட்டகுண-பொருந்திய சிரேஷ்டமாண் எண் குணங்களையுடையவரே! குன்றக்குடிக்கு அதிப-குன்றக்குடிக்குத் தலைவரே! அருளாதோ-தந்தருளாதோ?

பொழிப்புரை

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத் தகுத்தககு திங்குத் திகுத் திகிகு சகணசக சகசகண செகண செக செகசெகெண சங்ச் சகச்சகண செங்கச் செகச்செகண தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத் தனத்திகுதிதிகுதிகுதி தங்குத் தகுத்தகுகுதிங்கத் திகுத் திகுத் திகுகு டணணடணடணடணண டிணிணிடிணிடிணிணிடண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிணி தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரிதன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரி என்ற ஒலியுடன், தாளக் கூட்டங்களும், பல முரச வாத்தியங்களும், கரடிகை, தமருகம், முழவு, தவில், தம்பட்டம், மத்தளம், இடக்கை, பறை, பதலை, திமிலை முதலிய வாத்தியங்கள் மிகவும் முழங்கவும், போரில் அற்று விழுந்த பெரிய தலை மண்டைகளை உண்ணும்-சண்டை யிடும் கூட்டமான கழுகுகளும், அவற்றைத் தொடர்ந்து நெருங்கிக் கூட்டமாக கருடன்கள் வரவும், காக்கைகள் மொகு மொகு என்று வந்து சேரவும், இவையாவும் குடல் நிணம் இவற்றை யுண்டு இரச்சலிடவும், பழம் பேய்கள், நாய்கள், நரிகள் சத்தஞ் செய்து இனிக்கின்றது என்று உண்ணவும், உக்கிரமான கோழிக்கொடி, துங்குக் குகுக்கு என்று ஒலிக்கவும், அலைந்து திரியும் திசையைப் போற்றி செய்து நடன மிடவும், வலிமை மிகுந்த சூரிய சந்திரர்களின் ஒளிமங்கவும், சிறந்த குதிரை, யானை, தேர், சேனை, கோட்டை மதில்களையுடைய அசுரர்களின் ஆற்றலையும் துடுக்கையும் அடக்கி ஒடுக்கிப் போர்புரிந்து, தேவர்களுக்கு வலிமையை அருளிய பெருமிதம் உடையவரே! திசைகளின் நிலையைக் குலைக்கவல்ல வலிமை மிகுந்த யானையின் வலிய தந்தங்களை அழிக்கவல்லனவும், புணர்ச்சிக்கு உரிய வலிமை பூண்டனவும், சகல வேதங்களும் புகழ்கின்ற பெரியவரும், சிலம்பு கலகல என்று ஒலிக்கும் அழகிய