14. பாஞ்சராத்திரி மத மறுதலை371


ளுடம்பைக்கண்டு "யான் சிவனல்லது வேறொரு கடவுளில்லையென்னுஞ்
சிவபத்தன் மெய்யேயாகில், இது செய்தவன் பத்துப்பிறப்புப் பிறக்கக்கடவன்"
என்று சபிக்கப் புருஷோத்தமனும் பயப்பட்டுத்துக்கித்து வீழ்ந்தான்.     29

பயப்பட்டுப் பரனைநோக்கித் தவம்பண்ணப் பரனும்தோன்றி
நயத்தஞ்ச லென்று வேண்டிற் றென்னென நார ணன்தான்
பெயர்த்தருள் பிருகு சாப மெனஅன்பன் பிருகு வென்ன
உயக்கொள்நீ பவந்தோ றென்ன ஓமென்றான் உலக நாதன்.  300

     (உரை) அந்தப் பிருகுமுநிவர் சாபத்தினாலே பயப்பட்டுப்
பரமேசுவரனை நோக்கித் தவசுபண்ணப் பரமேசுவரனும் அநுக்கிரகித்துப்
"பயப்படாதே உனக்கு வேண்டியது எது" என்று கேட்ப, புருஷோத்தமன்
பிருகுமுநிவர் சாபத்தைத் தீர்த்தருள வேண்டுமென்று விண்ணப்பஞ்செய்யப்
பரமேசுவரனும் பிருகுமுநி நம்முடைய பத்தனென்றருள, ஆனால் அவன்
சாபத்தாலே யெடுக்கும் பிறப்புத்தோறும் என்னை இரக்ஷித்தருள
வேண்டுமென்ன, ஜகன்னாதனாகிய பரமேசுவரனும் அப்படியே இரக்ஷிக்கிறோ
மென்றான்.                                                  30

இப்படிப் பிருகு சாபத் தீரைந்து பிறப்பின் வீழ்ந்து
மெய்ப்படு துயர முற்று வருபவன் விமலன் அல்லன்
எப்படி யானுஞ் சொன்னேன் இறைஅரி அல்ல னென்றே
மைப்படி கண்டன் அண்டன் மலரடி வணங்கி டாயே.   301

     (உரை) இந்த முறைமையிலே பிருகுமுநிவர் சாபத்தாலே ஒன்பது
பிறப்புப் பிறந்து சரீரவருத்தமுற்று மேலுங் குதிரையாகப் பிறந்தும்
ஜநநமரணப்படுபவன் மலரகிதனான கர்த்தாவல்லன். வேதாகம
சாத்திரங்களானுஞ் சொன்னேன் மோக்ஷகர்த்தா விஷ்ணு அல்லனென்றே.
இனி மோக்ஷகர்த்தா யாவனென்ன விரும்புதியாயின், நீலகண்டனாகிய
மேலானவனே கர்த்தா. அவனது தாமரை மலர்போன்ற சீர்பாதத்தைச் சரியை
கிரியா யோக ஞானத்தாலே வணங்கி நினது பவத்தை நீக்கிக்கொள்வாயாக. 31