திரிபுர மெரிய* நக்க சேவகம் போற்றி மூவர்க்
கருளிய தலைமை போற்றி யனங்கனை யாகந் தீய
எரியிடு நயனம் போற்றி யிரதிவந் திரப்ப மீளக்
கரியவன் மகனுக் காவி யுதவிய கருணை போற்றி. |
(இ
- ள்.) திரிபுரம் எரிய நக்க சேவகம் போற்றி - திரிபுரம்
எரியுமாறு சிரித்தருளிய வீரம் காக்க; மூவர்க்கு அருளிய தலைமை போற்றி
- அப்புரத்திலுள்ள மூவருக்கு அருளிய தலைமை காக்க; அனங்கனை
ஆகம் தீய எரியிடும் நயனம்போற்றி - மதவேளை அவன் உடல் நீறாக
எரித்தருளிய நுதல்விழி காக்க; இரதிவந்து இரப்ப - இரதிவந்து குறை
யிரப்ப, மீள - திரும்பவும், கரியவன் மகனுக்கு ஆவி உதவிய கருணை
போற்றி - திருமாலின் புதல்வனாகிய அம்மதவேளுக்கு உயிர் அளித்தருளிய
கருணை காக்க.
திரிபுரம்
எரிந்த ஞான்று மூவர் உய்ந்தனர் என்பதும் அவர்க்கு
இறைவன் அருள் பாலித்தனன் என்பதும்,
"மூவெயில் செற்றஞான் றுய்ந்த மூவரி
லிருவர் நின்றிருக் கோயிலின்
வாய்தல்
காவ லாளரென் றேவிய பின்னை யொருவ னீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநட மகிழ மணிமுழா முழக்க வருள்செய்த
தேவ தேவநின் றிருவடி யடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூ
ருளானே"
|
என்னும் நம்பியாரூரர்
தேவாரத்து அருளிச் செய்யப்பட்டமை காண்க. (18)
நகைத்தட
வந்த+ வந்த நகுசிரந் திருகி வாங்கிச்
சிகைத்திரு முடிமேல் வைத்த திண்டிறல் போற்றி கோயில்
அகத்தவி சுடரைத் தூண்டு மெலிக்கர சாள மூன்று
சகத்தையு மளித்த தேவர் தம்பிரான் சரணம் போற்றி. |
(இ
- ள்.) நகைத்து அட வந்த அந்த நகுசிரம் - சிரித்துக்
கொல்லுதற்கு வந்த அந்த வெண்டலையை, திருகி வாங்கி - திருகி எடுத்து,
சிகைத் திருமுடிமேல் வைத்த திண்திறல் போற்றி - சடையையுடைய அழகிய
முடியின்கண் வைத்த மிக்க திறல் காக்க; கோயில் அகத்து அவிசுடரை -
திருக்கோயிலினுள் அவிகின்ற விளக்கை, தூண்டும் எலிக்கு - தூண்டிய
எலிக்கு, அரசு ஆள மூன்று சகத்தையும் அளித்த - ஆட்சி புரிய மூன்று
உலகத்தையும் அளித்தருளிய, தேவர் தம்பிரான் சரணம் போற்றி - தேவ
தேவனது திருவடி காக்க.
நகுசிரம்
- வெண்டலை; இது தாருக வனத்து முனிவர்களால்
விடுக்கப்பட்டது. எலி விளக்கைத் தூண்டிய சிவபுண்ணியத்தால் மாவலியாகப்
பிறந்து உலகாண்ட தென்பது வரலாறு. (19)
(பா
- ம்.) * திரிபுரம் பொரிய. +நகைத்திடவந்த.
|