பக்கம் எண் :

114திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



துதித்தனர் பணிந்தார் - ஏனைப் புலவர்களும் தனித்தனியே துதித்து
வணங்கினர்.

     தேவபாணி - தெய்வத்தைப் பாடும் பாட்டு. முதற் கடவுளைப்
பாடினமையின் பெருந் தேவபாணி எனப்பட்டது. அது,

"சூல பாணியை சுடர்தரு வடிவனை
நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை
பால்வெண் ணீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை
நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை
கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேலுடைக் கையனை விண்டோய் முடியனை
ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை
தேவ தேவனை திருமறு மார்பனை
கால மாகிய கடிகமழ் தாரனை........."

என்பது, எழுகூற்றிருக்கை - ஒன்று முதல் ஏழுவரையுள்ள எண்களை
அமைத்துப் பாடும் ஒருவகைச் சித்திரப் பாட்டு. அது,

"ஓருடம் பீருரு வாயினை யொன்றுபுரிந்
தொன்றி நீரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூல மேந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி யெழில்பெற மிலைத்தனை
ஒருகணை யிருதோள் செவியுற வாங்கி
மூவெயி னாற்றிசை முரணரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய விரண்டு நீக்கி
ஒன்று நினைவோர்க் குறுதி யாயினை
அந்நெறி யொன்று
மனம்வைத் திரண்டு நினைவி லோர்க்கு
முன்னெறி யுலகங் காட்டினை யந்நெறி
நான்கென வூழி தோற்றினை
சொல்லு மைந்தலை யரவசைத் தசைந்தனை
நான்முகன் மேன்முகங் கபால மேந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவ ரங்க மொருங்குட னேந்திய
ஒருவ நின்னாதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை யுழிதர
ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது வைந்துநின் னிலையது