| 
	
	| நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே இரண்டுநின் குழையே யொன்றுநின் னேறே
 ஒன்றிய காட்சி யுமையவ ணடுங்க
 இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
 முத்தீ நான்மறை யைம்புல னடக்கிய
 அறுதொழி லாளர்க் குறுதி பயன்தனை
 ஏழி லின்னரம் பிசைத்தனை
 ஆறி லமுதம் பயன்தனை யைந்தில்
 விறலியர் கொட்டு மழுத்த வேந்தினை
 ஆல நீழ லன்றிருந் தறநெறி
 நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
 நன்றி யில்லா முந்நீர்ச் சூர்மாக்
 கொன்றங் கிருவரை யெறிந்த வொருவன்
 தாதை யொருமிடற் றிருவடி வாயினை
 தரும மூவகை யுலக முணரக்
 கூறுவ னால்வகை
 இலக்கண விலக்கிய நலத்தக மொழிந்தனை
 ஐங்கணை யவனொடு காலனை யடர்த்தனை
 ஏழி னோசை யிராவணன் பாடத்
 தாழ்வாய்க் கேட்டவன் றலையளி பொருத்தினை
 ஆறிய சிந்தை யாகி யைங்கதித்
 தேரொடு திசைசெல விடுத்தோன்
 நாற்றோ ணலனேய் நந்திபிங் கிருடியென்
 றேற்ற பூத மூன்றுடன் பாட
 இருகண் மொந்தை யொருகணங் கொட்ட
 மட்டுவிரி யலங்கன் மலைமகள் காண
 நட்ட மாடிய நம்ப வதனாற்
 சிறியேன் சொன்ன வறிவில் வாசகம்
 வறிதெனக் கொள்ளா யாக வேண்டும்
 வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
 கீதம் பாடிய வண்ணல்
 பாதஞ் சென்னியிற் பரவுவன் பணிந்தே."
 |  என்பது. பூவார் எனற்பாலது 
        எதுகை நோக்கிக் குறுகிநின்றது; ஆர் உவமவுருபு; பூவர் என்பதற்குச் சுந்தரர் என்றுரைப்பாரு முளர். துதித்தனர்,
 முற்றெச்சம்.
      நக்கீரர் 
        பாடிய இந்நான்கு பிரபந்தங்களும், மற்றும் இவர் பாடிய திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, காரெட்டு,
 போற்றித் திருக்கலி வெண்பா, திருக்கண்ணப்பர் திருமறம் என்பனவும்,
 திருமுருகாற்றுப்படையும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினொராந்
 |