|  இரண்டு கரியமலை போல 
        விடுத்த, கொடும் பாசக்கையினர் - கொடிய பாசத்தைக் கையிற் கொண்டவராய், வாய் மென்று வரும் சினத்தவரில் -
 வாயை மென்று வரும் - சினத்தையுடைய காலபடர் இருவருள், ஒருவன்
 இது விளம்பும் - ஒருவன் இதனைக் கூறுவான்.
       அளந்த 
        - வரையறுத்த; 
        
          | "அளந்தன போக 
            மவரவ ராற்றால்" |  என்பது காண்க. விடுத்த 
        என்னும் பெயரெச்சம் சினத்தவர் என்பதன் விகுதி கொண்டு முடியும். நாளுலத்தலால் மறலிவிடுத்த சினத்தவரில் ஒருவன்
 இறைவனருளால் அது கேட்க இது விளம்பும் என முடிக்க. ஆல் :
 அசை. (35)
 
	
	| இன்றேயிங் கிவனுயிரைக் தருதிரெனு மிரும்பகட்டுக் குன்றேறுங் கோனுரையாற் கொள்வதெவன் பிணியுடம்பின்
 ஒன்றேனு மிலனொருகா ரணமின்றி யுயிர்கொள்வ
 தன்றேயென் செய்துமென மற்றவனீ தறைகிற்பான்.
 |       (இ 
        - ள்.) இன்றே இங்கு இவன் உயிரைத் தருதிர் எனும் - இப்பொழுதே இங்கு இம்மணமகன் உயிரைக் கொண்டு வருவீராக என்று
 கூறிய, இரும்பகட்டுக் குன்று ஏறும்கோன் உரையால் - பெரிய எருமைக்
 கடாவாகிற மலையிலேறும் நம் தலைவனது ஆணையால், கொள்வது எவன் -
 இவனுயிரைக் கவர்வது எங்ஙனம்; உடம்பில் பிணி ஒன்றேனும் இலன் -
 உடலின்கண் ஒரு பிணியும் இல்லாதவனாயுளன், ஒரு காரணம் இன்றி உயிர்
 கொள்வது அன்றே - ஒரு காரணமுமில்லாமல் ஓருயிரைக் கொள்வது
 இயல்வதன்றே, என் செய்தும் என - என்ன செய்வோம் என்று வினவ
 மற்றவன் ஈது அறைகிற்பான் - மற்றொருவன் இதனைக் கூறுவான்.
       இரும்பகடு 
        - கரிய கடாவுமாம். தருதிரென்பது கோன் உரையாகும்; காரணமின்றி உயிர் கொள்வதன்றே; 
        பிணி ஒன்றேனு மிலன்; ஆகலின் அவனுரையாற் கொள்வது எவன்; என்செய்தும்; என்றிங்ஙனம் உரைத்துக்
 கொள்க. மற்றவன் - மற்றையான். (36)
 
	
	| ஆற்றாலே றுண்டகணை யருகொதுங்கும் பார்ப்பனியைக் காற்றால்வீழ்த் தெவ்வாறு கவர்ந்தேமப் படியிந்தச்
 சாற்றார வாரத்திற் றாம்பறுத்துப் புறநின்ற
 ஈற்றாவை வெருளவிடுத் திவனாவி கவர் கென்றான்.
 |       (இ 
        - ள்.) ஆற்று ஆல் அருகு ஒதுங்கும் பார்ப்பனியை - வழியிலுள்ள ஆலமரத்து நிழலினருகு ஒதுங்கிய பார்ப்பனியின் உயிரை, ஏறுண்ட கணை
 காற்றால் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் - (அம் மரத்தின் கண் முன்னரே)
 சிக்கிக் கிடந்த கணையைக் காற்றினால் வீழ்த்தி எங்ஙனம் கவர்ந்தோமோ,
 அப்படி - அவ்வாறே, புறம் நின்ற ஈற்று ஆவை - புறத்தே நின்ற புனிற்றுப்
 பசுவினை, இந்தச் சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்து
 |